பாஜக தலைவராக ஆளுநர்! இதுக்கு வேறு வேலை பார்க்கலாமே.. ஆர்என் ரவியை காட்டமாக விமர்சித்த தங்கம் தென்னரசு
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கும், மாநில அரசுக்கும் இடையே கருத்து மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் திராவிடத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் மாநில அரசையும் அவர் சாடியுள்ளார். இது மீண்டும் மோதலை அதிகரித்துள்ள நிலையில் ஆளுநர் ஆர்என் ரவியை தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மிகக்கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் இருந்து வருகின்றன. ஆளுநர் ஆர்என் சனாதனம் பற்றி பெருமையாக பேசுவதோடு, திராவிடத்தை அடிக்கடி விமர்சனம் செய்கிறார். இதுதான் மோதலுக்கு முக்கிய காரணமாகும்.

மேலும் தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாகவும் திமுக அரசு குற்றம்சாட்டி வருகிறது. மேலும் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்என் ரவி தனது உரையின் சில பாராக்களை படிக்காமல் விட்டார். இதற்கு எதிராக ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்த நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி பாதியில் வெளியேறினார்.
இவ்வாறு ஆளுநர் ஆர்என் ரவி மற்றும் தமிழக அரசுக்கும் இடையேயான மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்த பேட்டியில் ஆளுநர் ஆர்என் ரவி கூறியுள்ளதாவது: திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம் மட்டுமே. காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது.
இருப்பினும் கூட தனிப்பட்ட முறையில் எனக்கும் முதல்வர் முக ஸ்டாலினுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. ஸ்டாலின் ஒரு நல்ல மனிதர். அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவரிடம் நானும் என்னிடம் அவரும் பரஸ்பரம் மரியாதையாகவே நடந்து கொள்கிறோம். ஆனால் ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி எல்லை தாண்டி செயல்படுகிறார் என்று திமுக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது. அபத்தமானது.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை அறிந்தும் நான் எப்படி சட்டப்பேரவையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று கூற முடியும். நான் தமிழக மக்களுக்கு உண்மையை மட்டுமே உரைப்பேன் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறேன் அல்லவா?. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநர் மாளிகை நிதி பற்றி பொய்யுரைத்துவிட்டார். அவர் பெட்டி கிரான்ட்டில் விதிமீறல் என்று கூறினார். அந்த பதம் 2000ஆம் ஆண்டே நீக்கப்பட்டுவிட்டது.அதனால் பெட்டி கிரான்ட்டில் வரம்பு மீறல் என்பதே அப்பட்டமான பொய்" என்று கூறியுள்ளார்'' என்பன போன்ற பல விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பல விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதாவது மதசார்பற்ற நாட்டில் பொறுப்புணர்வை மீறி ஆளுநர் ஆர்என் ரவி செயல்படுகிறார். அவர் தான் எடுத்த பதவிப்பிரமாணத்தை மீறி செயல்பட்டு வருகிறார். நிர்வாக விவகாரங்களை பொதுவெளியில் பேசி வருகிறார். அதோடு அடிப்படையற்ற கருத்துகளை பேசி வருகிறார். இந்த அடிப்படையற்ற கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிக்காவிட்டால் அது சரியான கருத்துகளாக புரிந்து கொள்ளப்படும். இதனால் தான் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜனநாயக சக்திகளின் எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
ஆளுநர் பணியை தவிர அனைத்து வேலைகளையும் ஆர்என் ரவி செய்கிறார். பொறுப்புள்ள பதவியில் இருப்பதை மறந்துவிட்டு ஆளுநர் பேச வேண்டாம். ஆர்என் ரவி ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை. பாஜக தலைவர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வந்தது போல் தெரிகிறது. ஆர்என் ரவி ஆளுநர் மாளிகையில் அமர்ந்து தமிழக பாஜக தலைவராக செயல்படுகிறார்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதவை பல மாதங்களாக கிடப்பில் போட்டார். இதன் மூலம் அவர் எத்தகைய மனிதர் என்பது தெரியவரும். திராவிடத்துக்கு தவறான பொருள் சொல்கிறார். திருக்குறளை திரிக்கிறார். சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார்.
மேலும் மாநில அரசு எழுதி அனுப்பியதை வாசிக்க விருப்பமில்லை என்றால் வேறு வேலையை பார்க்க வேண்டுமே தவிர அவை மாண்பை குறைக்கும் உரிமை எவருக்கும் இல்லை. ஆளுநர் பதவி என்பது மாநில அரசின் பிரதிபலிப்பே தவிர, தனிப்பட்ட அதிகாரம் கொண்ட பதவியல்ல;
ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் அதற்கான தன்மையுடன் நடக்க வேண்டுமே தவிர, தனி ஆவர்த்தனம் செய்யக்கூடாது என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்!












Click it and Unblock the Notifications