நல்ல வேளை! புலி வாய் இருக்குற பக்கமா நீங்க நிற்கவில்லை! செல்லூர் ராஜுவை பங்கம் செய்த தங்கம் தென்னரசு
சென்னை: நல்ல வேளை புலி வாய் இருக்கின்ற பக்கமாக நிற்காமல் புலி வால் இருக்கின்ற பக்கமாக நின்றீர்கள், என செல்லூர் ராஜூவை சட்டசபையில் வைத்தே பங்கம் செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட செல்லூர் ராஜூ அப்படியே சிரித்து அந்த தருணத்தை சமாளித்தார்.
செல்லூர் ராஜுவுக்கு இப்படி ஒரு பதிலை அமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்ததால் சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.

தமிழக சட்டசபை
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் 9வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தனக்கே உரிய நக்கல், நையாண்டி பாணியில் மதுரையில் ஒரு தொழிலும் இல்லை என பேச ஆரம்பித்தார். தொழிலே இல்லாத ஊருக்கு மெட்ரோ கொண்டு வருகிறீர்கள், அமைச்சர் தங்கம் தென்னரசுவை மதுரை மக்கள் ஆஹா ஓஹோ வென பாராட்டும் படி தொழிற்சாலைகள் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஆஹா ஓஹோ
ஆஹா ஓஹோ என்பதை தனக்கே உரியே பாணியில் நையாண்டி மாடுலேஷனில் செல்லூர் ராஜூ பேசியது அமைச்சர் தங்கம் தென்னரசுவை சூடாக்கியது. இதையடுத்து சிரித்துக் கொண்டே பதிலளிக்க எழுந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, செல்லூர் ராஜூவை பங்கம் செய்துவிட்டார். ''அண்ணே கொஞ்ச நாளைக்கு முன்னாடி புலி வாலை பிடித்த போட்டோவை பார்த்தேன், அவரது தைரியத்தை பார்த்து நான் மட்டுமல்ல தமிழக மக்கள் அனைவரும் ஆஹா ஓஹோவென கூறினார்கள்.''

புலி வால்
நல்ல வேளை அண்ணே வேளை புலி வாய் இருக்கின்ற பக்கமாக நிற்காமல் புலி வால் இருக்கின்ற பக்கமாக நின்றீர்கள், மதுரைக்காரர் என்பதால் விவரம் தான் என கலாய்த்தார். தன்னை கலாய்ப்பது கூட தெரியாமல் அமைச்சர் பதிலை கேட்டு சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் செல்லூர் ராஜூ. இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் செல்லூர் ராஜூவை அமைச்சர் பங்கம் செய்த போது அதிமுக உறுப்பினர்களே விழுந்து விழுந்து சிரித்தது தான்.

ஒரே சிரிப்பலை
அதேபோல் செல்லூர் ராஜு பேச எழுந்தாலே அதிமுக உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுகிறது. இதை வைத்து பார்த்தால் அவரை காமெடி பீஸாக அவர்கள் கருதுகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications