க.அன்பழகன் மாளிகை விவகாரம்.. 'வெற்று அறிக்கைகள், வீண் புரளிகள்..' அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி
சென்னை: நந்தனத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலகக் கட்டிடத்திற்கு "பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை" எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
மறைந்த திமுக முதுபெரும் தலைவரான பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக கட்டிடத்திற்குப் பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை என்று முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரில் இருந்த அம்மா வளாகத்திற்கு மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை என பெயர் சூட்டியதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிவிக்கை வெளியிட்டனர். இந்நிலையில், அறிக்கைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

கல் மனம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திராவிட இயக்கத்தின் முன்னணித் தலைவராக பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் செயல்பட்டு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய பேராசிரியர் க. அன்பழகனார் நூற்றாண்டு விழா தொடக்கமாக, அன்னாரின் நினைவையும், சமூகச் சீர்திருத்தத்திற்கான அவரது பங்களிப்பையும் போற்றும் விதமாக, சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலகக் கட்டிடத்திற்கு "பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை" எனப் பெயர் சூட்டியதை ஏற்றுக் கொள்ள இயலாத "கல் மனம்" படைத்தவர்களாக அதிமுக எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமியும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மாறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கண்டனத்திற்குரியது.

திராவிட இயக்க சிந்தனைகள்
சட்டமன்றத்தில்- கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நிதியமைச்சர் மூலம் அறிவித்து- அதை முதலமைச்சர் செயல்படுத்தியிருப்பதற்குத் கண்டனத்தைத் தெரிவிக்கிறார்கள் என்றால்- அவர்கள் மனதில் திராவிட இயக்க சிந்தனைகள் அறவே நீர்த்துப் போய் விட்டன என்பதை மீண்டும் ஒரு முறை இப்போது தெளிவுபடுத்திவிட்டது. பத்தாண்டுக் காலம் பதவி சுகம் அனுபவித்து- இன்றைக்கு ஏமாற்றத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் இவர்களால் திராவிட இயக்கத்திற்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட பேராசிரியர் பெயர் சூட்டியதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எரிச்சல் படுகிறார்கள். ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடித்து அறிக்கை விடத் துடிக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை!

உண்மை என்ன
ஆனால் பேராசிரியர் பெயரில் அந்த மாளிகைக்குப் பெயர் சூட்டப்பட்டதில் உள்ள உண்மை தகவல்களைக் கூட அறியாமல்- அதுவும் நிதியமைச்சராக இருந்த ஒருவரும், முதலமைச்சராக இருந்த இன்னொருவரும் அறிக்கை விட்டிருப்பதால் உண்மையை விளக்க- அவர்களுக்கு ஒரு விளக்கத்தைச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். சென்னை நந்தனத்தில், கால்நடை பராமரிப்புத்துறை, ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மீன்வளத்துறை போன்ற பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களின் கட்டிடங்கள் அமைந்துள்ள 'அம்மா வளாகத்தில்' உள்ள ஒரு கட்டிடமான ஒருங்கிணைந்த நிதித்துறை கட்டிடத்திற்குத்தான் "பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை" எனப் பெயரிடப்பட்டுள்ளது.

காழ்ப்புணர்ச்சி இல்லை
கடந்த அதிமுக ஆட்சியின்போது பெயரிடப்பட்ட அம்மா வளாகம் என்ற பெயரையோ, அதற்குரிய அரசாணையையோ மாற்றவில்லை- அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு அதிமுக ஆட்சி பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும், முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிய புதிய சட்டமன்றத்தையும் சிதைத்தது போல் செய்து நாங்கள் செய்து விடவில்லை. அம்மா வளாகம் என்ற பெயர் மாற்றப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், முதலமைச்சர் தலைமையில் இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பின், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு முந்தைய அரசின் திட்டங்களையோ, பெயர்களையோ மாற்றவில்லை. இது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். ஆனால் எதுவுமே தெரியாதது போல் அறிக்கை விட வேண்டும் என்று நினைக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும், எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் அவர்கள் வெற்று அறிக்கைகள்- வீண் புரளிகள்- பொய்க்குற்றச்சாட்டுகளை வைத்தே கடந்த ஆறு மாதமாக அரசியல் நடத்தி வருகிறார்கள். ஆக்கப் பூர்வமான அரசியல் என்பதன் அரிச்சுவடியே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வழக்கமான ஒன்று தான்
திமுக ஆட்சியில் ராணிமேரி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட ஒரு கட்டடத்திற்கு "கலைஞர் மாளிகை" எனப் பெயரிடப்பட்டது. அதிமுக ஆட்சி வந்தவுடன் காழ்ப்புணர்ச்சியோடு கருணாநிதியின் பெயரை அதிமுக ஆட்சி அடியோடு அகற்றிவிட்டதை வசதியாக மறந்து விட்டு இன்றைக்கு நடைபெறாத ஒன்றிற்காக அறிக்கை விட்டு இருப்பது வெட்கக்கேடாகும். பொதுவாக நிறையக் கட்டிடங்கள் அமைந்துள்ள வளாகத்திற்கு ஒரு பெயரும், அந்த வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடங்களுக்குத் தனித்தனிப் பெயர்களும் வைக்கப்பட்டுள்ளமைக்குப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.

திராவிட இயக்க வெறுப்பு
உதாரணமாக, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு நாமக்கல் கவிஞர் மாளிகை எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை கல்லூரி சாலையில் அமைந்துள்ள கல்வித்துறை வளாகமான டிபிஐ வளாகத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்திற்கு ஈவிகே சம்பத் மாளிகை எனவும் பெயரிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்திற்கு அம்மா மாளிகை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதைக் கூட ஆட்சியிலிருந்த அவர்கள் உணரத் தயாராக இல்லை. அந்த அளவிற்குத் திராவிட இயக்க வெறுப்பு அவர்கள் உடம்பெல்லாம் கடந்த நான்கு வருடங்களில் ஊறிப் போய் விட்டது.

உண்மை அறிந்து அறிக்கை
ஆகவே பொறுப்புள்ள பதவி வகிக்கும் எதிர்க்கட்சி தலைவரும், எதிர்க்கட்சி துணை தலைவரும்- இது போன்ற அறிக்கைகள் வெளியிடும் போது குறைந்த பட்சம் உண்மை என்ன என்பதை அறிந்து கொண்டு அறிக்கை விடும்படி கேட்டுக் கொள்கிறேன். பல்லாண்டுகால அரசியல் அனுபவம் எங்களுக்கும் இருக்கிறது என்று மேடைகளில் பேசினால் போதாது. செயல்களிடும்- தங்களின் அறிக்கைகளிலும் அது தலை காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.
-
ஷாக்கில் அதிமுக! விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அந்த சரவணனா? பாஜக விஐபிகள் போட்ட மெகா ஸ்கெட்ச் -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்!











Click it and Unblock the Notifications