கார் ஓட்டிய அமைச்சர் டிஆர்பி ராஜா.. உள்ளே இருந்தது முக்கிய பிரமுகர்.. யார் இந்த யங் லீயு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரம் வல்லம் வடகாலில் சிப்காட் சார்பில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் 18,720 பெண்கள் தங்கும் வகையிலான மெகா குடியிருப்பை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். முன்னதாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா சென்னையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு தானே காரை ஓட்டியபடி முக்கிய பிரமுகரை அழைத்து சென்ற வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

தமிழ்நாட்டில் சிப்காட் சார்பில் பல்வேறு இடங்களில் தொழிற்பூங்காங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகாலில் சிப்காட் நிறுவனம் மூலம் 1,456 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

trb raja foxconn chairman young liu Kanchipuram sipcot foxconn woman hostel

இங்கு ரூ.706 கோடி மதிப்பீட்டில் பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் தங்கும் விடுதி கட்ட முடிவு செய்யப்பட்டது. சிப்காட் சார்பில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் ரூ.706 கோடியில் இந்த பணி என்பது தொடங்கப்பட்டது.

அடுக்குமாடி குடியிருப்புகளாக இந்த விடுதி என்பது கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 13 தொகுதிகளாக 10 மாடிகளுடன் இந்த விடுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை இன்று முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் 18,720 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் குடியிருப்பு வளாகமாக கட்டப்பட்டுள்ளது.

இதனால் விழாவில் ஃபாக்ஸ்கான் தலைவர் யாங் லீயு பங்கேற்று முதல்வர் ஸ்டாலினுட்ன சேர்ந்த விடுதி கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, தாமோ அன்பரசன் உள்ளிட்டவர்கள் விழாவில் பங்கேற்றனர். இந்நிலையில் தான் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது திறப்பு விழாவுக்கு முன்பே சென்னையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா கார் ஓட்டி சென்றுள்ளார். விழாவில் பங்கேற்க ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லீயு சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவரை நேரில் பூங்கொத்து கொடுத்து அமைச்சர் டிஆர்பி ராஜா வரவேற்றார். அதன்பிறகு யங் லீயுவை தனது காரில் ஏற்றிய டிஆர்பி ராஜா, அவரே காரை ஓட்டியபடி காஞ்சிபுரம் சென்றார்.

பெண்களுக்கான ஹாஸ்டல் வசதி.. 18,720 பேர் வரை தங்கலாம்.. காஞ்சிபுரம் சிப்காட்டில் திறந்து வைத்த ஸ்டாலின்!


பொதுவாக தமிழகத்துக்கு வரும் தொழிலதிபர்களும், அமைச்சர்களும் தனித்தனி கார்களில் பயணிப்பார்கள். அல்லது ஒரே காரில் பயணித்தால் டிரைவர் தான் காரை ஓட்டுவார். ஆனால் டிஆர்பி ராஜா, ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லீயுவை தனது காரின் முன் இருக்கையில் அமர வைத்து அவரே காரை ஓட்டி சென்றது கவனம் பெற்றது.

ஃபாக்ஸ்கான் என்பது ஆப்பிள் ஐபோன்கள் தயாரிப்பு நிறுவனமாகும். இதன் ஆலை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது. இங்கு ஏராளமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் ஐபோன்களை தவிர ஐ பேட்களையும் தயாரிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு அதிக முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு என்பது கிடைக்க உள்ளது. இத்தகைய சூழலில் தான் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பெண் பணியாளர்களுக்கு தேவையான மெகா ஹாஸ்டல் விடுதி என்பது காஞ்சிபுரம் வல்லம் வடகாலில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+