கோட் சூட் போட்டு டிப் டாப்பாக.." இணையத்தில் டிரெண்டிங் வீடியோ.. அட நம்ம டிஆர்பி ராஜா.. என்ன மேட்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய டிஆர்பி ராஜா இப்போது வெளிநாடு சென்றுள்ளார். அவரது படம் ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

சென்னையில் சமீபத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் உலகெங்கும் பல நாடுகளில் இருந்து தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்தன. இது தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.

 Minister TRB Rajaa in Coat suit is now trending in internet

டிஆர்பி ராஜா: பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீடுகளை அறிவித்தன. இந்த மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டிய தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு முதல்வர் தொடங்கி பலரும் பாராட்டு தெரிவித்து இருந்தனர். இதற்கிடையே சில நாட்களிலேயே அவரது மற்றொரு படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அமைச்சர் எங்கே சென்றுள்ளார். இது எது தொடர்பான படம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெறும். கடந்தாண்டு இந்தக் கூட்டம் மிகச் சிறப்பாக நடந்த நிலையில், இந்தாண்டும் அதேபோல கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல்முறையாகத் தமிழ்நாடு பங்கேற்றது. அதன் பிறகு ஆண்டுதோறும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசு இந்த மன்றத்தில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு அரசு: இதில் உலகின் முன்னணி முதலீட்டாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், பல நாட்டு அரசு பிரதிநிதிகளைச் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து விளக்கப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டில் முதலீடுகள் வரும். கடந்தாண்டு ஜன. மாதம் இந்தக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அப்போது தமிழ்நாடு அரசு முதலீடுகளை ஈர்க்க பல நடவடிக்கைகளை எடுத்தன. இந்தாண்டும் இந்த கூட்டம் இப்போது தொடங்கி நடந்து வருகிறது.

இதற்கிடையே இந்தாண்டும் டாவோஸில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடந்து வருகிறது. இதில் தமிழ்நாட்டிற்கான அரங்கை அமைச்சர் டிஆர்பி ராஜா தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் தொழில், மனிதவளம் குறித்தும் முதலீட்டுக்கான சூழல் இருக்கிறதா என்பதைச் சர்வதேச நாடுகள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாநாடு வரும் ஜனவரி 15 முதல் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நடவடிக்கை: இந்த மாநாட்டிலும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. இதற்காக தொழிற்துறை அமைச்சர் அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையிலான குழு ஒன்று சுவிட்சர்லாந்து சென்றுள்ளது. இந்த அரங்கைத் திறந்து வைக்கும் போது எடுக்கப்பட்ட படம் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

டாவோஸில் இந்தாண்டு நடக்கும் மாநாட்டில் பருவநிலை மாற்றம், அமேசான் காடுகள் பாதுகாப்பு, டீப் ஃபேக் தொழில்நுட்பத்தின் ஆபத்துகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+