“நாங்க நலமா இல்லை".. ட்ரெண்ட் ஆக்கிய எடப்பாடி.. எகிறி வந்து பதிலடி கொடுத்த அமைச்சர் டிஆர்பி ராஜா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நாங்க நலமா இல்லை ஸ்டாலின்" எனக் கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று 'நீங்கள் நலமா?' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பொதுமக்களை தொடர்பு கொண்டு, தமிழக அரச்ன் திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கிறதா? அதில் ஏதும் சிரமம் உள்ளதா? என பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

Minister trb rajaa reply to edappadi palanisamy who said naanga nalama illai stalin

இதேபோல் அமைச்சர்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களை தொடர்பு கொண்டு அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வார்கள். நீங்கள் நலமா திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, "நாங்க நலமா இல்லை" எனக் குறிப்பிட்டு இன்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

எடப்பாடி சொன்ன பதில்: இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைதளத்தில், " "நீங்கள் நலமா" என்று கேட்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே-
நலத் திட்டங்கள் நின்று போச்சு!
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போச்சு!

சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் உயர்ந்தாச்சு!
விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு!

எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு!
இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடியா ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை!

#நாங்கநலமாஇல்லை_ஸ்டாலின் !" என பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, அதிமுகவைச் சேர்ந்த பலரும், "நாங்க நலமா இல்லை ஸ்டாலின்" என்ற ஹேஷ்டேக்கில் பதிவிடத் தொடங்கினர். இதைத்தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

டிஆர்பி ராஜா பதிலடி: இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பதில் அளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தான் நலமாக இல்லை என்று முதல்வருக்கு முறையிட்டிருக்கிறார் !

விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டு கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

பதவியைக் காப்பாற்றுவதற்காக பா.ஜ.க.வுடன் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் செய்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

தூத்துக்குடியில் மக்களைக் குருவிகளைப் போல சுட்டுத் தள்ளிய ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?: பொள்ளாச்சி இளம்பெண்களை சீரழித்த கொடூரன்களுக்கு பாதுகாப்பு அளித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான CAAவுக்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

கொரோனாவில் ப்ளீச்சிங் பவுடர் வரை கொள்ளையடித்த ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

கட்சித் தலைவி வாழ்ந்த கொடநாட்டிலேயே கொலையும் கொள்ளையும் நடக்க விட்ட நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

உங்களின் இருண்ட ஆட்சியிலிருந்து விடுபட்டு விடியல் ஆட்சி கண்ட தமிழ்நாட்டு மக்கள் இன்றும் என்றும் நலமாகவே இருப்பார்கள், திராவிட மாடல் ஆட்சியில்" எனத் தெரிவித்துள்ளார்.

'நீங்க நலமா' திட்டத்தை முன்வைத்து இன்று திமுக - அதிமுக வார்த்தைப் போர் நடத்தி வருவது சமூக வலைதளங்களை அமளிதுமளி ஆக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+