விளையாட்டின் தலைநகராக தமிழகம் மாறும்! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புது நம்பிக்கை!
சென்னை: விளையாட்டின் தலைநகராக தமிழகம் மாறும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புது நம்பிக்கை அளித்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுன்டேசன் (''TN Champions Foundation'') பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய போது உதயநிதி ஸ்டாலின் இதனைக் கூறினார்.

மேலும், அந்த நிகழ்வில் உதயநிதி பேசியதாவது;
''விளையாட்டு நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது, நமது உடல் மற்றும் மன ரீதியாக பல நன்மைகளை ஏற்படுத்துகின்ற விளையாட்டு நமது சமூகத்தின் ஒற்றுமையை ஊக்குவிக்கிறது.
தமிழ்நாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகராக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு புதிய திட்டங்களை தொடங்கவும், விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் எனும் அறக்கட்டளையை தொடங்கியுள்ளோம்.
விளையாட்டுத்துறை சிறப்பாக இயங்க அதற்கு நிதி ஆதாரம் என்பது மிக மிக அவசியமான ஒன்று. எனவே, தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேசன் மூலம் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு உதவ முடிவு செய்து தொடங்கவுள்ளோம்.
விளையாட்டு வளர்ச்சியினை உருவாக்கிட நியாயமான கிராமப்புற விளையாட்டு திறமைகளை கண்டறியும் வகையில் விளிம்பு நிலை இளைஞர்கள், எங்களிடம் உள்ளனர்.
தமிழ்நாட்டில் விளையாட்டுத் திறனை மேம்படுத்த தமிழ்நாடு தொழில் துறையினர் உரிய பங்களிப்பை அளித்திட இதுவே சரியான தருணம். சி.எஸ்.ஆர் (CSR) நிதி மூலம் பல விளையாட்டு வீரர்களுக்கு பல வழிகளில் நிதி உதவி செய்து நிறுவனங்கள் பங்களிக்க முடியும்.
தொழில் வளர்ச்சியில், மகாராஷ்ட்டிராவுக்கு பிறகு 2- வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. கலைஞர் ஆட்சி காலத்தில் இருந்தே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், தமிழ்நாட்டில் தொழில்துறை சிறந்து விளங்குகிறது. சென்னையில் இருந்த தொழில்வளர்ச்சி மாநிலம் முழுவதும் பெருக வேண்டும் என தென் மாவட்டங்களுக்கு மினி டைடல் பார்க் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் தொழில் நிறுவனங்கள் மூலம் முழு ஆதரவுடன் தமிழ்நாடு ஒரு பொருளாதார சக்தியாக மாறியுள்ளது. இப்போது உங்களின் முழு ஆதரவுடனும் பங்களிப்புடனும் தமிழகத்தை ஒரு விளையாட்டு சக்தியாக மாற்றுவதற்கான நேரம் இது.''












Click it and Unblock the Notifications