சேப்பாக்கம் தொகுதி பள்ளிகளுக்கு உதயநிதி தந்த கிஃப்ட்! ஜப்பான் டெக்னாலஜி! கற்றல் கற்பித்தல் இனி ஈஸி!
சென்னை: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் ஜப்பான் டிஜிட்டல் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் எளிதாக கற்கும் முறையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
ஜப்பான் தொழில்நுட்ப முறைகளை பள்ளிகளில் பயன்படுத்துவதன் மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை, மாணவர்களின் கற்றல் முறை எளிதாக்கப்பட்டு, பொதுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளை சுலபமாக மாணவர்கள் எதிர்கொள்ள வழிவகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவரம் வருமாறு;
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 18 சென்னைப் பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் காட்சிப்படுத்தும் சாதனம் மற்றும் வரைப்பட்டிகை ஆகிய ஜப்பான் டிஜிட்டல் தொழில்நுட்பச் சாதனங்கள் ரியான் டெக் நிறுவனத்தின் சார்பில் விலையில்லாமல் வழங்கப்பட உள்ளது.
இதில் முதற்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை சென்னை உயர்நிலைப்பள்ளி, கொய்யாத்தோப்பு சென்னை தொடக்கப்பள்ளி மற்றும் சென்னை உயர்நிலைப்பள்ளி, இருசப்பா தெரு சென்னை உயர்நிலைப்பள்ளி மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்னை நடுநிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் ரியான் டெக் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட ஜப்பான் டிஜிட்டல் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி கற்றல், கற்பித்தல் முறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் சிந்தாதிரிப்பேட்டை, மேற்கு கூவம் ஆற்றுச்சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தத் தொழில்நுட்ப முறைகளை பள்ளிகளில் பயன்படுத்துவதன் மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை, மாணவர்களின் கற்றல் முறை எளிதாக்கப்பட்டு, பொதுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளை சுலபமாக மாணவர்கள் எதிர்கொள்ளவும்
வழிவகை செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications