“எங்க போனாலும் இருக்கீங்களே.. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்ல”: டிஸ்கிளைமரோடு உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
சென்னை: "தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று சொல்வார்கள். நீங்க எங்க போனாலும் இருக்கீங்களே" என பத்திரிகையாளர் சந்திப்பில் சிரித்தபடி கேட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2ஆம் தேதி சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசுகையில், "டெங்கு, மலேரியா, கொரோனாவைப் போன்றது சனாதன தர்மம். அதை எதிர்க்கக் கூடாது, ஒழிக்க வேண்டும்" எனப் பேசியிருந்தார். சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து, நாடு முழுவதும் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி உட்பட வடமாநிலங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு பாஜகவினர், இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சனாதன தர்மத்துக்கு எதிரான பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருந்தார். இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் பலரும் உதயநிதியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், "நமது முன்னோர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து பாதுகாத்த சனாதன தர்மத்தை, சிலர் ஒழிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்கள். இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவ்வாறு பேசுபவர்களின் நாக்கு பிடுங்கப்படும், கண்கள் தோண்டப்படும். சனாதன தர்மத்துக்கு எதிராகப் பேசிவிட்டு இனி ஒருவரும் இந்த நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது" என்று மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம், ஒரு செய்தியாளர் சனாதன தர்மம் சர்ச்சை பற்றி கேள்வி கேட்டவுடன், தற்போது சனாதனம் பற்றி பேசுவதை விட்டுவிடுங்கள். நான் இங்கேயே தான் இருக்கப் போகிறேன். அதனை பிறகு விவாதித்து கொள்ளலாம். சிஏஜி அறிக்கையின் படி வெளியான 7.5 லட்சம் கோடி ஊழலை பற்றி பேசுவோம் எனக் கூறினார்.
மேலும் சிரித்தபடி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "பத்திரிகை நண்பர்களை ஒரு நாளைக்கு எத்தனை முறைதான் சந்திப்பது? எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது, ஆனால், தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று சொல்வார்கள். அதற்கு சரியான ஆட்கள் பத்திரிகையாளர்கள் தான். எங்கு போனாலும் இருக்கிறீர்கள். உங்கள் ஆர்வம் புரிகிறது. உங்களுக்கு என் நன்றி" என கிண்டலாக தெரிவித்துள்ளார்.
-
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்".. முதல்வரிடம் உதயநிதி சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications