ஃபேக் நியூஸ் பரப்பி அருவருப்பு அரசியல் செய்றாங்க.. கவனமா இருக்கணும்.. அமைச்சர் உதயநிதி பேச்சு!
சென்னை : தமிழ்நாட்டில் சிலர் அருவருப்பு அரசியல் செய்து வருகின்றனர். போலியான செய்திகளை பரப்புகிறார்கள். பகுத்தறிவை வளர்த்துக்கொண்டு, நமக்கு வரும் செய்தியை ஆராய்ந்து உண்மையா பொய்யா என்பதை ஆராய வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி முன்பதிவு தொடக்கவிழா இன்று நடைபெற்றது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மாரத்தானில் ஓடும் திருநங்கைகளுக்கு ஊக்கத்தொகையாக எனது சொந்த செலவில் திமுக இளைஞரணி சார்பாக ரூ.1,000 வழங்கப்படும். நான் சட்டமன்றத்தில் எனது கன்னிப்பேச்சில் பேசியதே திருநங்கைகளுக்காகத்தான்." என்றார்.
தயாநிதி மாறனை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்காமலேயே அவர் வந்திருப்பதாகச் சொன்னார்கள். அவர் வந்துதான் ஆக வேண்டும். ஏனென்றால் அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் வேறு வருகிறது என சிரித்தபடியே பேசினார் உதயநிதி ஸ்டாலின். மத்திய சென்னையில் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என்றும் உதயநிதி உறுதியளித்தார்.
மேலும் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இது வாட்ஸ்-அப் யுகம், அதிகமாக ரீச் ஆகணும், ரீட்வீட் ஆகவேண்டும் என்பதற்காக உண்மையா பொய்யா என்றே ஆராயாமல் தவறான தகவல்களை ஃபார்வர்டு செய்துவிடுகிறோம். செய்தி உண்மையா? இல்லையா என்று பகுத்தறிய வேண்டும். தமிழ்நாட்டில் சிலர் அருவருப்பு அரசியல் செய்து வருகின்றனர். Fake நியூஸ் அனுப்புகிறார்கள். பகுத்தறிவை வளர்த்துக்கொண்டு, நமக்கு வரும் செய்தியை ஆராய்ந்து உண்மையா பொய்யா என்பதை அறிந்து, இன்னொருவருக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
-
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்












Click it and Unblock the Notifications