எங்கபோனாலும் ஓடவிடுறாரு.. மா.சு, தயாநிதி மாறனை ரவுண்டுகட்டி கலாய்த்த உதயநிதி! “தம்பி தம்பி.. போதும்”
சென்னை : "எந்த மாவட்டத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வுக்குச் சென்றாலும் அரசு அதிகாரிகள் தான் ரொம்ப பாவம். அதிகாலை 4 மணிக்கே எழுந்து காடு, மலை, மேடு என்று ஓட விடுகிறார்" என கலாய்த்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மேலும், தயாநிதி மாறனையும் சிரித்தபடியே கலாய்க்க, அவர், "தம்பி.. தம்பி.. போதும்" என மேடையிலேயே கையெடுத்துக் கும்பிட்டார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், சென்னையில் 3 மாவட்ட செயலாளர்களுக்கு இடையேயான போட்டியால் பாதிக்கப்படுவது நான் தான் என்றும் பேசினார்.

கருணாநிதி நினைவு மாரத்தான்
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி முன்பதிவு தொடக்கவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோரும், திமுக நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த மாரத்தானில் பங்கேற்கும் திருநங்கைகள் அனைவருக்கும் இளைஞரணி சார்பில் ரூ. 1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.

மா.சு ஓடாத நாடே இல்லை
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மா.சுப்பிரமணியன் அண்ணன் அமைச்சர், மாவட்ட செயலாளர் என்பதைத் தாண்டி டக்கென நினைவுக்கு வருவது அவர் மாரத்தான் வீரர் என்பதுதான். உலகத்திலேயே ஃபிட்டான அமைச்சர் என்று சொன்னால் நமது முதலமைச்சரை சொல்லலாம், அதற்கு அடுத்து மா.சுப்பிரமணியன் தான். தமிழ்நாடு மட்டுமல்ல ஜப்பானில் எல்லாம் போய் மாரத்தான் ஓடுகிறார் மா.சு. மா.சுப்பிரமணியன் ஓடாத நாடே கிடையாது. எனக்கெல்லாம் அவரை பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது.

இவங்க போட்டியால் எனக்கு அவஸ்தை
கட்சி நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். அமைச்சர் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்கிறார்.. மாரத்தானிலும் ஓடுகிறார். அதிலும், சேகர்பாபு, சிற்றரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு இடையே ஒரு ஆரோக்கியமான போட்டியே நடக்கிறது. யார் மாவட்டத்தில் அதிக நிகழ்ச்சிகளை நடத்துவது என்று.. இதில் அதிகமாக பாதிக்கப்படுவது நான் தான். சென்னையில் இருந்தால் இவர்கள் கூட்டிச் சென்று விடுவார்கள் என இவர்கள் 3 பேருக்கு பயந்தே நான் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணத்திற்கு போய்விடுகிறேன். அந்தளவுக்கு போட்டி போட்டுக்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதிகாரிகள் பாவம்
ஓடினாள் ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் என்ற கருணாநிதியின் பராசக்தி பட வசனம் போல அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் சென்றால் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். எந்த மாவட்டத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வுக்குச் சென்றாலும் அரசு அதிகாரிகள் பாவம். காடு, மலை, மேடு என்று ஓட விடுகிறார். காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து ஓட ஆரம்பித்து விடுகிறார்." எனப் பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

தம்பி.. போதும் போதும்
மேலும், தயாநிதி மாறனை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்காமலேயே அவர் வந்திருப்பதாகச் சொன்னார்கள். அவர் வந்துதான் ஆக வேண்டும். ஏனென்றால் அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் வேறு வருகிறது என சிரித்தபடியே பேசினார் உதயநிதி ஸ்டாலின். "தம்பி தம்பி.. போதும்.. போதும்" என தயாநிதி கையெடுத்துக் கும்பிட்டார். இதையடுத்து, மத்திய சென்னையில் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications