21 பேரை கொன்னுட்டாங்க.. ஆளுநர் அவர்களே Who are you? உங்களுக்கு ஒரு சவால்! உதயநிதி பரபரப்பு பேச்சு
சென்னை: 21 பேரின் நீட் மரணம் தற்கொலை அல்ல.. ஒன்றிய அரசு செய்த கொலை.. அந்த கொலைக்கு பாஜக உடந்தையாக இருந்தது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை உண்ணாவிரத போராட்டத்தில் பேசி உள்ளார்.
தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது. சமீபத்தில் நீட் தேர்வில் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காத சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (19) என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த எதிர்ப்பை தீவிரம் ஆக்கி உள்ளது.

இந்த நிலையில்தான் நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க.வினர் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். சென்னையில் நடக்கும் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டம் நடந்தது.
இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கல்வி என்பது உரிமை, அந்த உரிமையை பாதுகாப்போம். மாணவ மாணவியரின் கல்வி உரிமையை நாங்கள் பாதுகாப்போம். தமிழ்நாடு முழுக்க உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர்களுக்கு நன்றி.
தண்ணீர் கூட குடிக்காமல் கொலபட்டினி உண்ணாவிரதம் இருந்துள்ளனர் திமுகவினர். இந்த வலி பெரிய வலி இல்லை, 21 உயிர்கள் போய்விட்டது, அதை விட பெரிய வலி இல்லை. அனிதா தொடங்கி 21 பேர் பலியாகி விட்டனர். தமிழ்நாட்டிற்கு பாஜக என்ற கட்சியே தேவையற்றது நீட் மரணம் எல்லாம் தற்கொலை இல்லை. 21 பேரும் தற்கொலை செய்யவில்லை .
நீட் மரணம் எல்லாமே கொலை: இதை செய்தது ஒன்றிய பாஜக அரசு. அதற்கு உறுதுணையாக இருந்தது அடிமை அதிமுக எடப்பாடி அரசு. நீட் தேர்வுக்கு முடியும் வரை எங்கள் போராட்டம் தொடரும். காலை முதல் நாம் போராடி வருகிறோம். நீட் தேர்வை அகற்றாமல் நாம் விட மாட்டோம்.
போராடினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும், தகுதி நீக்கம் செய்வார்கள் என்று அதிமுகவினர் சொன்னார்கள்.எங்களுக்கு எதிராக அதிமுகவினர் புகார் கூட கொடுத்தனர். அமைச்சர் பதவி போனால் கூட பரவாயில்லை , நீட்டை எதிர்த்து நான் போராடுவேன். ஆளுநர் யார்? நீட் மசோதாவை அனுமதிக்க மாட்டேன் என்று சொல்ல நீங்கள் யார்?
ஆளுநர் அவர்களே Who are you? நீங்கள் வெறும் போஸ்ட்மேன் ஆளுநரே. ஆளுநர் ரவிக்கு ஒரு சவால் விடுகிறேன்.. அரசியல் பேச வேண்டும் என்றால் அரசியலில் நில்லுங்கள். தமிழ்நாட்டில் தேர்தலில் நில்லுங்கள், நான் சவால் விடுகிறேன். உங்களுக்கு எதிராக நாங்கள் கடைக்கோடி தொண்டரை நிறுத்தி வெற்றிபெற வைப்போம்.

உங்களை மக்கள் செருப்பை கழற்றி அடிப்பார்கள். அந்த தேர்தலில் வென்றால் உங்களுடன் சேர்ந்து நானும் நீட் தேர்வை ஆதரிக்கிறேன். தயாரா? ஆளுநரை கேள்வி கேட்ட அம்மாசியப்பனுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். ஆளுநரை கேள்வி கேட்டால் மிரட்டுவார்களா?. அம்மாசியப்பனுக்கு நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம்.. என்ன பண்ணுவீங்க?
என்னிடம் பயாஸுதீன் என்று மாணவர் கேள்வி கேட்டார். நீங்க ஆர். என் ரவி இல்லை. ஆர்எஸ்எஸ் ரவி. மறக்காதீங்க. உங்களை மட்டுமல்ல வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை ஓட ஓட விரட்டுவோம்.












Click it and Unblock the Notifications