வீரர் வீராங்கனைகளை நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தும் உதயநிதி! விறுவிறுப்பான விளையாட்டுத்துறை!
சென்னை: தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பெண்கள் சாம்பியன்ஷிப் - 2022 லேசர் பாய்மரப்படகு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை நேத்ராவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி பொன்னாடை அணிவித்து கவுரவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வில்வித்தை வீராங்கனை பவானிதேவி மற்றும் டென்னிஸ் வீரர் ராம்குமார் ராமநாதன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
லேசர் பாய்மரப்படகு வீராங்கனை நேத்ரா குமணன், தேசிய அளவில் 11 பதக்கங்கள் வென்றுள்ளார். 2021 ல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் -2020-ல் விளையாட தேர்ச்சி பெற்றார். 2020 ல் அமெரிக்கா, மியாமியில் நடைபெற்ற உலக கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். மேலும் இரண்டு முறை ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தில் (MIMS) பயனடைந்து வருகின்ற நேத்ரா குமணனுக்கு இதுவரையில் அரசு சார்பில் உயரிய ஊக்கத் தொகையாக ரூ.15 லட்சமும், டென்னிஸ் வீரர் ராம்குமார் ராமநாதனுக்கு ரூ.49 லட்சமும், வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவிக்கு ரூ.1.98 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வீரர் வீராங்கனைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஊக்கப்படுத்துவதாலும், ஆய்வுக்கூட்டங்களை தொடர்ந்து நடத்துவதாலும் விளையாட்டுத்துறை விறுவிறுப்படைந்துள்ளது.












Click it and Unblock the Notifications