முடியல.. அவங்க ஆதிக்கம்! வந்ததுமே ‘சின்னவர்’ காதில் போட்டு வைத்த சீனியர்கள்! அதிரடி ஆக்‌ஷன் ஆரம்பம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை : உதயநிதி ஸ்டாலின் முன்பே கட்சியில் அதிகாரமிக்கவராகத் திகழ்ந்தாலும், அமைச்சரான பிறகு, பல அமைச்சர்கள், முதல்வரிடம் கொண்டு சேர்க்க முடியாத தகவல்களை உதயநிதி ஸ்டாலினின் காதில் போட்டு வருகிறார்களாம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். எனினும், சில துறைகளில் ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், அமைச்சருக்கும், செயலருக்கும் இடையே சிக்கல் நீடிக்கிறதாம்.

மலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர், தனது துறைச் செயலரின் செயல்பாட்டால் வெறுத்துப்போய், முதல்வரிடம் புகார் கூறி, அந்த துறையில் இருந்தே எஸ்கேப் ஆகியுள்ளார்.

இன்னும் பல துறைகளிலும் இந்தப் பிரச்சனைகள் இருக்கிறதாம். இது முதல்வர் கவனத்துக்குச் சென்றும் ஆக்‌ஷன் இல்லாததால், புதிதாக கேபினட்டுக்குள் வந்திருக்கும் 'சின்னவர்' காதில் போட்டு வருகிறார்களாம். சென்னை : உதயநிதி ஸ்டாலின் முன்பே கட்சியில் அதிகாரமிக்கவராகத் திகழ்ந்தாலும், அமைச்சரான பிறகு, பல அமைச்சர்கள், முதல்வரிடம் கொண்டு சேர்க்க முடியாத தகவல்களை உதயநிதி ஸ்டாலினின் காதில் போட்டு வருகிறார்களாம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். எனினும், சில துறைகளில் ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், அமைச்சருக்கும், செயலருக்கும் இடையே சிக்கல் நீடிக்கிறதாம்.

மலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர், தனது துறைச் செயலரின் செயல்பாட்டால் வெறுத்துப்போய், முதல்வரிடம் புகார் கூறி, அந்த துறையில் இருந்தே எஸ்கேப் ஆகியுள்ளார்.

இன்னும் பல துறைகளிலும் இந்தப் பிரச்சனைகள் இருக்கிறதாம். இது முதல்வர் கவனத்துக்குச் சென்றும் ஆக்‌ஷன் இல்லாததால், புதிதாக கேபினட்டுக்குள் வந்திருக்கும் 'சின்னவர்' காதில் போட்டு வருகிறார்களாம்.

அமைச்சர் vs துறை செயலர்

அமைச்சர் vs துறை செயலர்

திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததுமே, பல்வேறு துறை செயலர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். தலைமை செயலர், முதன்மைச் செயலர்கள் என தனக்கு தோதான முக்கியமான சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையே நியமித்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், சில துறைகளில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்டவர்களே துறை செயலாளர்களாக இருந்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் கோலோச்சிய சில அதிகாரிகள், இன்றும் அதே முக்கியத்துவத்தோடு வலம் வருகின்றனர்.

புலம்பிய அமைச்சர்

புலம்பிய அமைச்சர்

மலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சருக்கு அவரது துறை செயலருடன், ஆரம்பம் முதலே கடுமையான பனிப்போர் நீடித்து வந்துள்ளது. ஆய்வுக் கூட்டத்திற்கு கூட துறை செயலர் வருவதில்லை, என்னை மதிப்பதே இல்லை, அவரை மாற்றி விடுங்கள், இல்லையென்றால் என்னை வேறு துறைக்கு மாற்றிவிடுங்கள் என முதலமைச்சரிடமே கோரிக்கை விடுத்திருக்கிறார் அவர். இதையடுத்து, அந்த அமைச்சரின் துறை அண்மையில் மாற்றப்பட்டது.

அமைச்சர்கள் ஆதங்கம்

அமைச்சர்கள் ஆதங்கம்

கடந்த திமுக ஆட்சி காலத்திலேயே அமைச்சராக இருந்தவர் என்பதால் அவர் முட்டி மோதி முதல்வரிடமே தெரிவித்துவிட்டார், ஆனால், புதிதாக அமைச்சர்களான பலரும், துறை செயலர்கள் மீதான அதிருப்தி பற்றி முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல முடியாமல் திணறி வருகிறார்களாம். இந்நிலையில் தான், கடந்த புதன்கிழமையன்று, அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதும், பல அமைச்சர்கள், உதயநிதியிடம் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

கொட்டித் தீர்க்கும் அமைச்சர்கள்

கொட்டித் தீர்க்கும் அமைச்சர்கள்

ஒரு துறையின் அமைச்சர், எனது பரிந்துரைகளையே துறை செயலர் தான் அப்ரூவ் செய்யும் நிலையில் இருக்கிறார், வட மாநில நிறுவனங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. என்னால் கன்ட்ரோல் செய்யவே முடியவில்லை, முதல்வரிடம் நேரடியாக என்னால் சொல்ல முடியவில்லை, நிறைய அமைச்சர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கிறது, கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரம் செலுத்தியது போல, நமது ஆட்சியையும் டேமேஜ் செய்யப் பார்க்கிறார்கள், நீங்கள் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புலம்பித் தீர்த்திருக்கிறாராம்.

உதயநிதி மூலம்

உதயநிதி மூலம்

போதாக்குறைக்கு, சில துறைகளின் செயலர்கள், அமைச்சர்களைப் பற்றிய புகார்களை தலைமைக்கு தட்டி விடுகிறார்களாம். இதனால், தங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது என்றும் சிலர் புலம்பியுள்ளனராம். இதுவரை தங்கள் புலம்பலை சக அமைச்சர்கள் வட்டத்திலேயே வெளிப்படுத்தி இருந்தாலும், முதல்வரின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்தனர். இப்போது, உதயநிதி ஸ்டாலின் மூலம் தங்கள் ஆதங்கத்தை முதல்வருக்கு பாஸ் செய்து வருகின்றனராம் அமைச்சர்கள்.

அதிகாரிகள் மாற்றம்?

அதிகாரிகள் மாற்றம்?

உதயநிதி ஸ்டாலின் காதுக்குச் சென்றுவிட்டதால், அவர் நிச்சயம் முதல்வர் ஸ்டாலினிடம் தெரியப்படுத்தி விடுவார், அதிகாரிகள் மாற்றப்பட்டு, துறை தங்கள் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்களாம் சில அமைச்சர்கள். ஜனவரி மாதம், சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பிறகு முக்கியமான துறைகளின் அதிகாரிகள் மாற்றப்படலாம் என இப்போதே உயர்மட்டத்தில் பேச்சுகள் உலவத் தொடங்கி விட்டனவாம்.

அதிரடி காட்டுவாரா?

அதிரடி காட்டுவாரா?

இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றதுமே, தரவரிசை சீனியாரிட்டி அடிப்படையில் 10வது இடத்திற்குய் வந்துவிட்டார் உதயநிதி. சட்டப்பேரவையிலும் அவருக்கு முதல் வரிசையில் இடம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இப்படியாக உள்ளே வரும்போதே அமைச்சரவையில் 'சூப்பர் பவர்' அதிகாரத்தைப் பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகள் மட்டத்தில் அதிரடியைக் கடைபிடிப்பாரா என்பது போகப்போகத் தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+