தமிழகத்தில் 153 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து.. அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் 153 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிகாரம் அளிக்கப்பெற்ற குழுவின் 7வது கூட்டத்தில் 160 கல்வி நிறுவனங்களின் விண்ணப்பங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், 153 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த துறை மூலம் இதுவரை 312 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் பெறுவதை எளிதாக்கி விரைவாக வழங்கும் வகையில் 2023ம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் தலைமை செயலாளர் தலைமையில் அதிகாரம் அளிக்கப் பெற்ற குழுவின் ஒப்புதல் பெற்று சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

2024ம் ஆண்டு முதல் மதவழி சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிகாரம் அளிக்கப்பெற்ற குழுவின் 7வது கூட்டத்தில் 160 கல்வி நிறுவனங்களின் விண்ணப்பங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், 153 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
இந்த துறை மூலம் இதுவரை 312 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 246 நிரந்தர அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன." இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications