கொச்சி ஹோட்டலில் இருந்து ‘எஸ்கேப்’ ஆன நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது! போதைப் பொருள் வழக்கில் நடவடிக்கை
சென்னை: போதைப் பொருள் வழக்கில் 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் குறித்த சோதனையின் போது அவர் தப்பி ஓடிய காட்சிகள் வெளியான நிலையில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நடிகர் சாக்கோ கைது செய்யப்பட்டுள்ளார்.
கொச்சி ஹோட்டலில் இருந்து தலைமறைவான மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக முன்னர் தகவல் வெளியானது.

பிரபல மலையாள நடிகர், ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் விஜய்யின் 'பீஸ்ட்', அஜித்தின் 'குட் பேட் அக்லி', ஜிகர்தண்டா - 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் சமீபத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும், அப்போது சக நடிகைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் மலையாள நடிகை ஒருவர் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், கொச்சியில் ஒரு ஓட்டலில் போதைப் பொருள் விற்பதாகக் கூறி போலீசார் சோதனை நடத்த இருந்தனர். போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைத் தேடி போலீசார் அந்த ஹோட்டலில் சோதனை நடத்தினர்.
இந்த விஷயம் தெரிந்த ஷைன் டாம் சாக்கோ அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் அவர் அந்த ஹோட்டலுக்கு போலீசார் வருவதை அறிந்து வேகமாக ஓடி எஸ்கேப் ஆகும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் அவர் எங்கே சென்றார் என போலீசார் தேடி வரும் நிலையில், அவரின் மொபைல் சிக்னல் கடைசியாக தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதால், அவர் இங்கே பதுங்கி இருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஷைன் டாம் சாக்கோவை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் அவர் கொச்சி காவல் நிலையத்தில் சரணடைய உள்ளதாக தகவல்கள் பரபரத்தன. இந்நிலையில் எர்ணாகுளம் போலீசார் நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கைது செய்துள்ளனர்.
-
தேசிய விருது பெற்ற பிரபல காமெடி நடிகர் சலீம் குமார் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications