காணாமல் போன டிக்டாக், பப்ஜி.. மறக்க முடியாத 2020!
சென்னை: டிக்டாக், பப்ஜி செயலுக்கு விதிக்கப்பட்ட தடை இளைஞர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த 2020ல் கொரோனா நெருக்கடி ஒருபுறம் எனில் டிக்டாக்கிலும் பப்ஜியிலும் பொழுதை கழித்தவர்கள் மிகவும் அதிர்ந்து போனார்கள். இந்த 2020ம் ஆண்டில் இந்தியா எடுத்த அதிரடியான நடவடிக்கையில் முக்கியமான இந்த இரண்டு செயலிகளுக்குமான தடையாகும்.
கடந்த ஜூன் மாதம் இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் கோபம அடைந்த மத்திய அரசு, சீனா உடனான ஆப் வணிக தொடர்புகளில் கைவைத்தது- டிக்டாக் உள்பட 59 செயலிகளுக்கு தடை விதித்தது. பாதுகாப்புக்கு அச்சறுத்தல் இருப்பதாக கூறி தடை விதித்தது.
சீனாவின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று இந்தியர்கள் டிவிட்டரில் கடும் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். அத்துடன் சீனாவின் ஆண்ட்ராய்டு செயலிகளை, ஆன்லைன் சாதனங்களை நீக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பிரச்சாரம் செய்தார்கள்.. சீன செயலிகளுக்கு எதிராக தீவிரமாக இந்த பிரச்சாரம் நடந்தது. இந்த நிலையில் தான் டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு அதிரடி மத்திய அரசு தடை விதித்தது.

அடிமை
இந்தியாவில் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரையும் மிக குறுகிய காலத்தில் அடிமையாக்கிய ஆன்லைன் விளையாட்டு என்றால் அது பப்ஜி (Player Unknown's Battle grounds -PUBG) தான்.

இந்தியாவில்
எந்த நேரம் பார்த்தாலும் பலர் ஸ்மார்ட்போனும் கையுமாக உலகத்தையே மறந்து பப்ஜி உலகத்திற்கு உள்ளே வாழ்ந்து வந்தார்கள். பப்ஜியை உலகம் முழுவதும் சுமார் 60 கோடி முறைகளுக்கும் மேல் சர்வதேச அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 5 கோடி பேர் தொடர்ந்து இந்த விளையாட்டை விளையாடினார்கள்

வருவாய் அதிகம்
இந்தியாவில் தான் பப்ஜி அதிக அளவில் டவுன்லோடு ஆகி இருந்தது. பப்ஜி 17.5 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டு இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தது. இந்த வருடம் முதல் பாதியில் பப்ஜியின் சர்வதேச வருமானம் கிட்டத்தட்ட ரூ. 9,731 கோடியாக இருந்தது.

தடை செய்ய கோரிக்கை
சீனா ஜூன் மாதம் இந்திய எல்லையில் நடத்திய ஆக்கிரிமிப்பு மற்றும் வீரர்கள் மீதான தாக்குதல் காரணமாக, மத்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை ஜூன் மாதம் தடை செய்தது. அப்போது, பல குடும்பங்கள் பப்ஜியையும் தடை செய்ய வேண்டும் என்று போர்க்குரல் எழுப்பினர். எனினும் அரசு தடை செய்யவில்லை. அதற்குக் காரணம் அது முழுக்க சீன செயலி அல்ல. இந்த விளையாட்டை தென் கொரிய நிறுவனம் தான் உருவாக்கி நிர்வகித்து வந்தது.

மொத்தமாக தடை
எனினும் அதன்பிறகு மத்திய அரசு மேலும் பல செயலிகளுக்கு தடை விதித்தது. அப்போது பப்ஜிக்கும் சேர்த்து தடை விதித்தது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறி சீனாவின் செயலிகளுடன் சேர்த்து பப்ஜிக்கும் தடை விதித்தது. கூகுளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டு தளங்களிலிருமிருந்து பப்ஜி விளையாட்டை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து, அந்நிறுவனங்கள் பப்ஜியை நீக்கின. ஏற்கனவே டவுன்லோடு செய்தவர்களும் அக்டோபர் 30ம் தேதி முதல் விளையாட முடியாத படி மொத்தமாக தடை விதிக்கப்பட்டது. இதனால் சோகத்தில் இருந்த இளைஞர்கள்., அதன்பிறகு ப்ரீ பயர் விளையாட தொடங்கிவிட்டனர். டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததும், பப்ஜிக்கு தடை விதித்தும் இளைஞர்களை பொறுத்தவரை 2020ல் மறக்க முடியாத நிகழ்வுகள் ஆகும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications