திருவிடந்தையில் திமுக இன்று பிரம்மாண்டம்.. முதல்வர் ஸ்டாலினே முன்னின்று செய்யும் சம்பவம்
சென்னை: சென்னை விழுப்புரம் மண்டலத்தில் உள்ள 49 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்ளும் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி மாநாடு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் திமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள், வாக்குச்சாவடி நிலைக்குழு உறுப்பினர்கள், வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள், வாக்குச்சாவடி நிலை இளைஞரணி நிர்வாகிகள் என ஒரு லட்சத்து 70 ஆயிரம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் இன்று நடைபெறும் மாநாட்டில் சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட 49 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் (Booth Agents) இதில் கலந்து கொள்கின்றனர்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், வாக்குச்சாவடி மட்டத்தில் கட்சியைப் பலப்படுத்துவது மற்றும் வாக்காளர் பட்டியலைச் சரிபார்ப்பது குறித்து முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாக உள்ளது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கி, முகவர்கள் மத்தியில் சிறப்புரையாற்ற உள்ளார்.
இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த மாநாட்டில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அந்தந்த மண்டலத்தைச் சேர்ந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இது வெறும் கூட்டமாக இல்லாமல், வாக்குச்சாவடி முகவர்களுக்குத் தேர்தல் நேரப் பணிகள் குறித்த ஒரு 'பயிற்சிப் பாசறையாக' நடத்தப்பட உள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக இத்தகைய முகவர்கள் கூட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை-விழுப்புரம் மண்டல மாநாடு திருவிடந்தையில் பிரம்மாண்டமாக இன்று நடைபெறுகிறது.
வெற்றி இலக்கை நோக்கிச் செயல்படவும், கட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும் முகவர்களுக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், வெற்றியை நோக்கி செயல்படுவது குறித்து முதல்வர் ஸ்டாலின், திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளார். இந்த மாநாட்டிற்காக கிழக்கு கடற்சாலையை ஒட்டிய திருவிடந்தையில் மிகப் பெரிய பந்தல் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications