Election Exclusive: ஆபரேஷன் நயினார்.. ஒரு சீட் வரக்கூடாது.. இல்லை பதவி காலியாகிடும்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்!
திருநெல்வேலி: வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக் கூடாது என்பதில் தி.மு.க தலைமை மிக உறுதியாக உள்ளது. குறிப்பாக, பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை ( Nainar Nagendran )அவரது சொந்தக் கோட்டையிலேயே வீழ்த்துவதற்காக 'ஆபரேஷன் நயினார் ' என்ற பெயரில் தி.மு.க ஒரு பிரம்மாண்டமான தேர்தல் வியூகத்தை வகுத்து வருகிறதாம்.. இதை எப்படியாவது சரியாக நிறைவேற்றி.. பாஜகவை "ஜீரோ" என்ற நிலைக்கு கேட்ஸ் செல்ல வேண்டும் என்று திமுக காய் நகர்த்தி வருகிறதாம்.
Nainar Nagendran: தலைமையின் நேரடி எச்சரிக்கை
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாஜக சார்பாக இவர் நெல்லையில் இருந்து எம்எல்ஏவாக தேர்வானார். அதன்பின் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நயினார் நாகேந்திரன் தோல்வியுற்றாலும், அவர் பெற்ற கணிசமான வாக்குகள் தி.மு.க-வை யோசிக்க வைத்துள்ளன. இதன் விளைவாக, திருநெல்வேலி மண்டல நிர்வாகிகள் மற்றும் தி.மு.க பலவீனமாக உள்ள பகுதிகளின் பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தால் கூட, அந்தப் பகுதியின் ஒட்டுமொத்த கட்சி அமைப்பும் அதிரடியாக கலைக்கப்படும் என்று முதலமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம், கீழ்மட்ட நிர்வாகிகள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை அனைவரும் மிகுந்த நெருக்கடியில் பணியாற்றி வருகின்றனர்.
அதன்படி வீடியோ மீட்டில் கடுமையாக எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்.. நெல்லை திமுகவின் கோட்டை இல்லை. அங்கே திமுக அதிமுகதான் மாறி மாறி வெற்றிபெறுகிறது. கடந்த முறை பாஜக வென்றுவிட்டது. இந்த நிலை மாற வேண்டும். அங்கே திமுக தொடர் வெற்றிபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான பணிகளை செய்யுங்கள்.. இல்லையென்றால் உங்கள் சீட் காலியாகிவிடும் என்று ஸ்டாலின் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சாதி ரீதியான கணக்குகள்: நைனாருக்கு செக்!
நெல்லை தொகுதியின் வாக்கு வங்கியை ஆய்வு செய்த தி.மு.க தலைமை, அங்கு முக்குலத்தோர் சமூகத்தை விட பிள்ளைமார் சமூகத்தின் வாக்குகள் அதிகளவில் இருப்பதை கண்டறிந்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் நயினார் நாகேந்திரனின் வெற்றிக்கு அந்தச் சமூக வாக்குகள் முக்கியப் பங்காற்றியதும் தெரியவந்துள்ளது.
சாதி வாரியாக நெல்லையில் வாக்காளர்களின் எண்ணிக்கை
- எஸ்.சி. - தேவேந்திர குல வேளாளர் (இந்து) -60,000
- தேவேந்திர குல வேளாளர் - கிறிஸ்தவர் -15,000
- பிள்ளைமார் -60,000
- யாதவர் -45,000
- தேவர் -35,000
- நாடார் -20,000
- இஸ்லாமியர் 20,000
- முதலியார் 7,500
- இதர பிரிவினர் 40,577
- மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3,03,077
இதில் மாரி செல்வராஜ் போன்றோரின் திமுக நட்பு காரணமாக, தேவேந்திர குல வேளாளர் ஓட்டுக்களில் கணிசமாக திமுகவுக்கு கிடைத்துவிடுகிறது. ஆனால், தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் பிள்ளைமார் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளனர் என்பதால் திமுக அவர்கள் மீது கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது என்கிறார்கள்.
அதே சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க நெல்லை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் சுப்பிரமணியனை நயினாருக்கு எதிராகக் களமிறக்க தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் பா.ஜ.க-வின் வாக்கு வங்கியைப் பிரித்து, வெற்றியைத் தன்வசமாக்க தி.மு.க திட்டமிட்டுள்ளது.
கனிமொழியின் சிறப்புப் பணி
தென் மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் பா.ஜ.க-வின் செல்வாக்கை சிதைக்க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு ஒரு தனிப்பணி வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் நேரடியாக கனிமொழிக்கு கொடுத்த டாஸ்க் இது என்கிறார்கள்.
ஒவ்வொரு தொகுதிக்கும் தகுதியான மூன்று வேட்பாளர்களின் பட்டியலைத் தயாரித்தல்.
பா.ஜ.க வேட்பாளர்களின் பலம் மற்றும் பலவீனங்களை ஆய்வு செய்தல்.
எதிர்க்கட்சிகளின் வியூகத்தை முறியடிக்கும் திறன் கொண்ட வேட்பாளரைத் தேர்வு செய்தல்.
நயினாருக்கு என்று சிறப்பாக திட்டங்களை வகுத்து.. அவருக்கு எதிராக களத்தை மாற்றுதல்.
போன்ற பொறுப்புகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க-வின் கோட்டையாகக் கருதப்படும் இடங்களைக் கைப்பற்ற தி.மு.க மேலிடம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள், தென் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications