தொகுதி மாறும்.. முக்கிய திமுக அமைச்சர்கள்? ஸ்டாலின் கையில் எடுக்கும் பிரம்மாஸ்திரம்.. என்ன நடக்குது?
சென்னை: தி.மு.க. அமைச்சர்கள் பலர் இந்த முறை சட்டசபை தேர்தலில் தொகுதி மாறி போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. திமுக அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் கலவையான அரசியல் நிலவரங்களை எதிர்கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது பலருக்கு எதிரான அரசியல் சூழல் அந்த தொகுதிகளில் நிலவுவதாக கூறப்படுகிறது.
சிலர் வலுவான நிலையில் இருந்தாலும், மற்றவர்கள் கடும் தேர்தல் சவால்கள் மற்றும் மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளனர். மாநிலம் முழுவதும் பல தொகுதிகளில் கள யதார்த்தம் அமைச்சர்களுக்கு எதிராக உள்ளதாக கூறப்படுகிறது..

மூத்த அமைச்சர் கீதா ஜீவன்
தூத்துக்குடி தொகுதியில் மூத்த அமைச்சர் கீதா ஜீவன் தொடர்ந்து வலுவான நிலையில் உள்ளார். அப்பகுதியில் அவரது செல்வாக்கு உறுதியாக உள்ளதோடு, பெரிய அரசியல் சிக்கல்கள் இல்லை. ஆனால் அமைச்சர்கள் பெரியகருப்பன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் அவ்வளவு வலுவாக இல்லை. மூத்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மூர்த்தி வலுவாக உள்ளனர். அவர்களின் செயல்பாடு, அரசியல் மற்றும் உள்ளூர் ஆதரவு அவர்களுக்கு தொகுதியில் சாதகமாக உள்ளது.
அதேபோல் அமைச்சர் அன்பில் மகேஷுக்கும் சாதகமான சூழல் உள்ளது. மொத்தமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களுமே சிறப்பாக செயல்படுவார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தேர்தல் நடைபெற்றால், அவர்கள் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவர் என அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.
வலுவான கட்டமைப்பு உள்ளது
அவர்களின் ஆழமான உள்ளூர் செல்வாக்கு, திறமையான நிர்வாக அணுகுமுறை மற்றும் கட்சி அமைப்பு பலம் ஆகியவை வாக்காளர்களுடனான தொடர்புகளை வலுப்படுத்தி உள்ளன.
ஆனால், அனைத்து அமைச்சர்களும் இத்தகைய பாதுகாப்பான நிலையில் இல்லை. அமைச்சர்கள் ரகுபதி மற்றும் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் தங்களுக்குரிய தொகுதிகளில் கணிசமான சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது. கட்சி மட்டத்திலான கருத்துக்களும் கள அறிக்கைகளும் வாக்காளர்களிடையே அதிருப்தி அதிகரிப்பதைக் காட்டுகின்றன.
இதற்கிடையில், செஞ்சி தொகுதியில் அரசியல் களம் கடும் போட்டியுள்ள களமாக மாறி வருகிறது. அமைச்சர் மஸ்தான் கடுமையான சவால்களை சந்தித்து வருவதால், மேம்பட்ட களப்பணி மற்றும் வலுவான வியூகம் உடனடியாகத் தேவை என கட்சி வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன. மாறிவரும் அரசியல் சூழலில், இந்த உட்கட்சி சவால்கள் தி.மு.க.வின் தேர்தல் வாய்ப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும் திமுக அரசு தனது தேர்தல் வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உளவுத்துறை மூலம் ஐந்து கட்டங்களாக ஒரு விரிவான கருத்துக்கணிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளது. கட்சி வட்டாரங்கள் இந்த முக்கியமான தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, ஆளும் கட்சிகள் இதுபோன்ற உளவுத்துறை ஆய்வுகளை மேற்கொள்வது பொதுவான ஒரு நடைமுறையாகும். இதன் முக்கிய நோக்கம், தங்கள் கட்சிக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சாதகமான தொகுதிகளுடன், சவால்களை எதிர்கொள்ள வேண்டிய பலவீனமான பகுதிகளையும் துல்லியமாக அடையாளம் காண்பதுதான். இதன்மூலம், தேர்தல் உத்திகளை வகுக்க ஒரு தெளிவான புரிதலைப் பெற முடியும்.
ஸ்டாலின் உளவுத்துறை
விரைவிலேயே தொடங்கவுள்ள இந்தக் கருத்துக்கணிப்பு, எதிர்வரும் தேர்தலுக்கான திமுகவின் உத்திகளை செம்மைப்படுத்த பேருதவியாக இருக்கும். பிரச்சாரங்களை மிகத் திறம்பட வடிவமைக்கவும், மக்களுக்குச் சரியான மற்றும் ஈர்க்கக்கூடிய வாக்குறுதிகளை வழங்கவும் இது வழிகாட்டும். இதன்மூலம் தேர்தல் களத்தில் கட்சியின் நிலையை மேலும் வலுப்படுத்த முடியும்.
2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக சார்பாக ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று குழுக்கள் வேட்பாளர்களைப் பரிந்துரைத்தன. பின், இறுதிப் பட்டியலில் லஞ்சம், செல்வாக்கு பங்காற்றியதாகப் பரவலான புகார்கள் எழுந்தன. அதாவது வேட்பாளர்களை தேர்வு செய்து அந்த லிஸ்டை திமுக தலைவர் ஸ்டாலினிடம் கொடுக்க.. வேட்பாளர்களிடம் அந்த குழுக்கள் பணம் வாங்கியதாக புகார்கள் வைக்கப்பட்டது. தகுதி, களப்பணிப் புகழ் புறக்கணிக்கப்பட்டதாகப் பல கட்சி நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர். ஸ்டாலின் இதை விரும்பவில்லை. இந்த முறை திமுக ஆளும் கட்சி என்பதால் வேட்பாளர் தேர்வில் உளவுத்துறையை பயன்படுத்தும் என்கிறார்கள்.
2026 தேர்தல் வேட்பாளர்களுக்கு திமுக தலைமை பல அடுக்கு தேர்வு முறையைத் திட்டமிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தரவு அடிப்படையிலான, ரகசியமான, தனிநபர் பரிந்துரைகளை சாராத செயல்முறையை இந்த முறை விரும்புவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது காசு கொடுத்துவிட்டு.. வேட்பாளர்களை தேர்வு செய்ய கூடாது என்று ஸ்டாலின் உறுதியாக உள்ளாராம்.
234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மூன்று சாத்தியமான வேட்பாளர்களின் பட்டியலை மாநில உளவுத்துறை தயாரிக்கும். இதற்கான உத்தரவை அவர் ஏற்கனவே உளவுத்துறைக்கு போட்டுவிட்டாராம். உள்ளூர் செல்வாக்கு, பொது பிம்பம், கடந்தகால தேர்தல் செயல்பாடு, தொண்டர்களைத் திரட்டும் திறன், வாக்காளர்களை கவரும் திறன் போன்ற தகவல்கள் அடிப்படையில் இந்த லிஸ்ட் தயார் செய்யப்படும். அதேவேளையில், அரசியல் மதிப்பீடு, தேர்தல் வியூகங்களை கையாளும் 'PEN' குழு, ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று வேட்பாளர்களுடன் மற்றொரு பட்டியலை உருவாக்கும். இக்குழு மாவட்ட அலகுகள், வாக்குச்சாவடி முகவர்கள், அரசியல் போக்குகளைக் கண்காணிக்கும் மூத்த பார்வையாளர்களிடமிருந்து அறிக்கைகளைச் சேகரிக்கும். இது போக இன்னொரு தனியார் குழுவும் வேட்பாளர்களை தேர்வு செய்யும். அந்த 3ன் அடிப்படையில் ஒரு வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார்.
-
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
உளவுத்துறையில் கூட கை வைக்கல.. டெல்லி மீது எடப்பாடி ஏக டென்சன்.. திமுகவிற்கு கிடைத்த ஃப்ரீ ஹேண்ட் -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள்












Click it and Unblock the Notifications