சிவில் சட்டம்.. தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? தெரிஞ்சே ஆகணும்.. தமிமுன் அன்சாரி ஆவல்!
சென்னை: பொது சிவில் சட்டம் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வினவியுள்ளார்.
மத்திய அரசின் பொறுப்பற்ற செயல், எத்தகைய ஜனநாயக போராட்டங்களை உருவாக்கப் போகிறது என்பதை எதிர்காலம் தான் தீர்மானிக்கும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

தேர்தல் அரசியல்
தேர்தல் அரசியலில் ஒரு சார்பு வாக்கு வங்கியை வலுப்படுத்தும் நோக்கோடு, ஒன்றிய பாஜக அரசு சிறுபான்மை விரோத போக்குகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பொது சிவில் சட்டத்தை திணித்திடும் முயற்சியில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது.இதற்கான பரிந்துரையை வடிவமைத்திட, பாஜக வின் மாநிலங்களவை உறுப்பினர் சுசில்குமார் மோடி தலைமையில் நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பொறுப்பற்ற செயல்
இது எத்தகைய பரிந்துரையை வழங்கும் என்பது தெரியாததல்ல. பொறுப்பற்ற இவர்களின் இப்பாதக செயல், எத்தகைய ஜனநாயக போராட்டங்களை உருவாக்கப் போகிறது என்பதை எதிர்காலம் தான் தீர்மானிக்கும். இந்நிலையில் கேரளா, மே.வங்கம், ஒரிஸா போன்ற மாநில அரசுகள் இதில் அமைதியாக இருக்கும் போது, தமிழக அரசு நீதிபதி சத்திய நாராயணா தலைமையில் இதற்காக ஒரு கமிட்டியை அமைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஒரே பொது சிவில்
இது குறித்து தமிழக அரசின் நிலைபாட்டை, முதல்வர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஒரே மதத்தில் பல பிரிவுகள், பல கலாச்சாரங்கள், வெவ்வேறு பண்பாடுகள், வழிபாட்டு முறைகள், திருமண திட்டங்கள் நம் நாட்டில் நிலவுகிறது. இச்சூழலில் எல்லா மதத்தினருக்கும் ஒரே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றாகும்.

ஐனநாயக சக்திகள் ஓரணியில்
வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்மை கலாச்சாரமே நமது வலிமை என்பதை உணர்ந்து அனைத்து ஐனநாயக சக்திகளும் ஓரணியில் நின்று தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
-
அரசு ஊழியர்களுக்கு விரைவில் குட் நியூஸ்? 21 மாத கோடிக்கணக்கான நிலுவை தொகையில் தமிழக அரசு முடிவு? -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. கார்டு விண்ணப்பித்தோருக்கு 30 நாளில் தமிழக அரசு குட் நியூஸ் -
நகராட்சி டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும்: தமிழ்நாடு அரசு அதிரடி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications