ஹிஜாப் விவகாரம்! உறுதியான நெஞ்சுரத்துடன் பயணிப்போம்! மனக்குமுறலை கொட்டும் தமிமுன் அன்சாரி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹிஜாப் கட்டாயம் இல்லை என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தனது ஆதங்கத்தை அறிக்கை வாயிலாக கொட்டித்தீர்த்துள்ளார்.

உறுதியான நெஞ்சுரத்துடன் பயணிப்போம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் ஒரு வாய்ப்பு இருக்கிறது எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கர்நாடக மாநிலம்

கர்நாடக மாநிலம்

கர்நாடக மாநிலம் உடுப்பியில் குந்தாப்புரா அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் வழக்கம் போல் ஹிஜாப் அணிந்து வந்த நிலையில், அக்கல்லூரி முதல்வர் அதற்கு தடை விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடக மாநில பாஜக அரசு மத அடையாள ஆடைகளை அணிந்து வர தடை என அறிவிப்பு செய்தது. இதனால் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையம் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கட்டாயம் இல்லை

கட்டாயம் இல்லை

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு கடும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
ஹிஜாப் அணிவது இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை என்பதால், ஹிஜாபுக்கு எதிராக கர்நாடக அரசின் தடை செல்லும் என தீர்ப்பளித்திருக்கிறது.
இஸ்லாம் என்பது ஒரு வாழ்வியல் மார்க்கம். அது மக்களுக்கு பல அறிவுரைகளை, வழிகாட்டல்களை வழங்கியிருக்கிறது. சமூகத்தை ஒழுங்குப்படுத்தும் உயரிய பணிகளில் ஒன்றாக கலாச்சார பாதுகாப்பை வலியுறுத்துகிறது.

ஹிஜாப் அணிவது

ஹிஜாப் அணிவது

அந்த வகையில் ஹிஜாப் அணிவது என்பது பெண்ணியமும், அவர்களின் கண்ணியமும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது. அதை விரும்பி அணிபவர்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்பதை முந்தைய நீதிமன்ற தீர்ப்புகள் விளக்கியிருக்கின்றன. ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக, சட்டத்தின் அடிப்படையில் துல்லியமான வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலும், கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.

அரிய கண்டுபிடிப்பு

அரிய கண்டுபிடிப்பு

இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது கட்டாயம் இல்லை என்ற 'அரிய கண்டுபிடிப்பையும்' கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. சட்டத்தின் அடிப்படையில் இந்த தீர்ப்பு ஏற்க முடியாததாக இருக்கிறது. மதவாத அச்சுறுத்தல்களும், மறைமுக நெருக்கடிகளும், அரசியல் அழுத்தங்களும் நீதிமன்றங்களை முற்றுகையிடுகின்றனவா? என்ற கேள்விகள் அனைவர் மனதிலும் எழுகிறது.

மேல்முறையீடு

மேல்முறையீடு

இத்தருணத்தில் முஸ்லிம் சமூகம் நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை. பெரும்பான்மை இந்து சமுதாய சகோதர, சகோதரிகள் சிறுபான்மையினரின் உணர்வுகளோடு ஐக்கியப்பட்டு கவலைகளை பகிர்ந்து வருவதை எண்ணிப் பார்த்து ஆறுதல் பெற வேண்டும்.
மேலும் இது இறுதியான தீர்ப்பும் அல்ல. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

ஃபாசிசம்

ஃபாசிசம்

ஃபாசிசத்தின் ஆக்கிரமிப்பு கரங்கள் நீளும் போது, ஜனநாயக வழியில் சளைக்காமல் போராடுவது காலத்தின் கட்டாயமாகிறது. இது போன்ற தருணங்களில் அனைத்து மக்களின் ஆதரவையும் திரட்டி ; உறுதியான நெஞ்சுரத்தோடு ; உன்னதமான கொள்கைகளோடு பயணிப்பதே காலம் வழங்கும் அறிவுரை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+