Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாரு சொன்னா முஸ்லிம்கள் போராடவில்லை என்று.. சீமானுக்கு பதிலடியாக லிஸ்டு போட்ட தமீமுன் அன்சாரி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அநீதிக்கு எதிராக இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் போராடி இருக்கிறார்களா என்று கேட்கும் சீமானுக்கு நிதானம் முக்கியம் என மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி தெரிவித்து உள்ளார்.

சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "மணிப்பூரில் இருந்து நமக்கு யாரும் வாக்களிக்கப்போவது இல்லை. இங்கு இருக்கக்கூடிய கிறிஸ்துவர்களும் நமக்காக ஓட்டுப்போடப்போவது கிடையாது.

MJK Thameemun Ansari condemn Seeman for critisizing Muslims and Christians

இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்துக்கொண்டு உள்ளோம் ஆனால் அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தேவாலயத்தில் தேவரே வாரீர் வாரீர் என்று பாடிவிட்டு, கடைசியில் யார் யாருக்கோ நாட்டை கொடுத்து இருக்கிறார்கள்.

இந்த நாட்டில் நடந்துள்ள அநீதி அக்கிரமங்களுக்கு பெரும் பொறுப்பு ஏற்க வேண்டியது இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும்தான். 18 விழுக்காடு வாக்குகளை தொடர்ந்து பல ஆண்டுகளாக திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் போட்டு போட்டு இந்த நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள்தான்.

ஊழல், லஞ்சம், சீர்கேடான நிர்வாகத்துக்கு காரணமே இவர்கள்தான். இவர்களிடம்போய் நாம் எங்கு பாவத்தை கொடுப்பது. பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்கிறார்கள். பெரும்பாவமே அவர்கள்தான். அவர்கள் எங்கு மன்னிப்பது? இன்னும் பாருங்கள், இவர்கள்தான் எங்களை பாதுகாப்பார்கள். இஸ்லாமியர்களுக்கு திமுகதான் பாதுகாப்பு என்பார்கள்.

ஆமாம், 20 வருடமாக வெளியில் விடாமல் சிறைக்கு உள்ளேயே வைத்து இருப்பது எவ்வளவு பெரிய பாதுகாப்பு? இஸ்லாமிய மக்களிடம் மறுபடியும் வாக்கு கேட்பார்கள். இந்த நாடாளுமன்ற தேர்தலில் அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வோம் என பேசுவார்களா இல்லையா என்ன பாருங்கள். நீங்கள் விடுதலை செய்யுங்கள். நாங்கள் நாம் தமிழர் கட்சியினரும் உங்களுக்கு வாக்களிக்கிறோம்." என்று தெரிவித்தார்.

சீமானின் இந்த கருத்துக்கு கடும் கண்டங்கள் எழுந்தன. குறிப்பாக நடிகர் ராஜ்கிரண் சீமானின் பெயரை குறிப்பிடாமல், ""இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்", பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம். இந்தப்பொறுமையை, தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

ராஜ்கிரணின் இந்த கருத்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சை கண்டித்தே இருப்பதாக பலரும் கருத்திட்டனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், "இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அநீதிக்கு எதிராக என்றைக்காவது போராடி உள்ளார்களா? நான் இஸ்லாமியர்களை அவமதித்ததாக கூறி மன்னிப்பு கேட்டால் அவர்கள் எனக்கு ஓட்டு போடுவார்களா? நடிகர் ராஜ்கிரண் இஸ்லாமியர்களுக்காக எத்தனை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்? என்று கேள்வி எழுப்பினார்.

சீமானின் இந்த பேச்சு மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சீமானின் இந்த கருத்துக்கு மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். "முல்லைபெரியாறு, காவிரி உரிமை, கூடங்குளம், மீத்தேன், NLC, விவசாயிகள், மீனவர்கள் நலன்கள் அனைத்திலும் முன்வரிசையில் நின்றவர்கள் முஸ்லிம்கள். அநீதிக்கு எதிராக போராடியதுண்டா? என கேட்கும் சகோ. சீமான் அவர்களே... கருத்தில் நிதானம் முக்கியம்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+