சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாத்தையும் கு.க செல்வம் பார்த்துப்பார்.. இதை மட்டும் பண்ணுங்க.. முக.அழகிரியுடன் "டீல்" பேசிய பாஜக

பாஜக தலைவர் அழைப்பு விடுத்தும் கட்சிக்கு வர மறுத்துள்ளார் முக அழகிரி

Google Oneindia Tamil News

சென்னை: "ஒரு கட்சி ஆரம்பியுங்கள்.. திமுகவில் இருந்து 5 எம்எல்ஏக்களை தருகிறோம்... அதை குக செல்வம் பார்த்து கொள்வார்.. கட்சி செலவை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.. அமைச்சர் பதவியும் தருகிறோம்.. என்ன சொல்றீங்க?" என்று பாஜக தலைவர் முக அழகிரிக்கு கொக்கி போட்டாராம்.. இந்த தகவல்தான் திமுக தரப்பை நிலைகுலைய வைத்து வருகிறது.

சில பிரச்சனைகள் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும், இன்னமும் அழகிரிக்கு மவுசு குறையவில்லை என்பதே உண்மை.. திமுகவில் பல சீனியர் தலைவர்கள், நிர்வாகிகள் அழகிரியுடன் மிகுந்த மரியாதையுடன் தற்போதும் நடந்து வருகிறார்கள்.

 MK Azhagiri not ready to break DMK

சில மாதங்களுக்கு முன்பு, புதிதாக கட்சியை ஆரம்பிக்க போகிறார் என்று சொல்லப்பட்டது.. பிறகு பாஜகவில் இணைந்துவிடுவாரா என்ற கிலியும் ஏற்பட்டது.. இதற்கு காரணம், கட்சியில் இருந்து விலகிய பிறகு, யாரிடமும் எதுவும் பேசுவது இல்லை.. சென்னையிலுள்ள மகன் துரை வீடு, மதுரை வீடு என்று போய் போய் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த சமயத்தில்தான், ரஜினி கட்சியில் அழகிரி சேரப்போகிறார் என்று ஒரு குரூப் கிளப்பி விட்டது.. பிறகு பாஜக அழகிரியை தன் பக்கம் இழுத்து கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்து விட்டது என்று இன்னொரு பகீர் கிளம்பியது.. அதன்படி வெடித்து வந்ததுதான் கேபி ராமலிங்கம் விவகாரம்.

எனினும், பாஜகவில் சேர இதுவரை அழகிரி சம்மதிக்கவில்லை... ஸ்டாலினுக்கு எதிராக பிளான்களை அழகிரி வைத்திருப்பாரே தவிர, பாஜகவில் நிச்சயம் சேரவே மாட்டார் என்று ஆரம்பத்தில் இருந்தே உறுதியாக சொல்லி வருகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

சில தினங்களுக்கு முன்பு, அழகிரிக்காக போஸ்டர்கள் பரபரத்து காணப்படுகின்றன.. அதில், "அஞ்சாநெஞ்சனே.. நேரம் நெருங்கிவிட்டது.. உண்மை தொண்டன் வெற்றியை உறுதி செய்ய வாரீர்... கழக ஆட்சி என்றும் கலைஞர் ஆட்சி அமையட்டும்" என்று அச்சிட்டு ஒட்டப்பட்டன. வழக்கமாக அழகிரிக்கு மதுரை மண்டலத்தில்தான் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வந்தநிலையில், கொங்கு மண்டலத்தில் ஒட்டப்பட்டது பல்வேறு விஷயங்களை வெளிப்படுத்துவதாகவே அமைந்தது.

ஆனால், தற்போது கட்சியே ஆரம்பிக்க போவதில்லை என்று அழகிரி சொல்லிவிட்டாராம்.. கடந்த வாரம் டெல்லியின் பாஜக தலைவர் ஒருவர் மதுரைக்கு வந்துள்ளார்.. அழகிரியை சந்தித்து பேசியும் உள்ளார்.. அப்போது பாஜகவுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார் போல் தெரிகிறது.. அதற்கு அழகிரி, "நான் கலைஞர் மகன்.. பாஜகவில் சேருவது என்பது நடக்காத விஷயம் என்றாராம்.. பிறகு அந்த பாஜக தலைவர் டெல்லி சென்றுவிட்டு, மறுபடியும் அழகிரியிடம் பேச்சு நடத்தி இருக்கிறார்.

மகிழ்ச்சியான செய்தி...இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது...அமைச்சர் தகவல்!! மகிழ்ச்சியான செய்தி...இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது...அமைச்சர் தகவல்!!

"நீங்கள் பாஜகவுக்கு வர வேண்டாம்.. ஆனால், திமுகவை ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும், சொந்தமாக கூட கட்சியை தொடங்குங்கள், நாங்கள் வேண்டுமானால் திமுக தரப்பின் 5 எம்எல்ஏக்களை தருகிறோம். அதை குக செல்வம் பார்த்து கொள்வார்.. கட்சி செலவை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.. வருங்காலத்தில் அமைச்சர் பதவியும் தருகிறோம்" என்று எடுத்து சொல்லி இருக்கிறார்.. அப்போதும் அழகிரி தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி மறுத்துவிட்டாராம்!

கருணாநிதி மகன் என்பதை மறுபடியும் மறுபடியும் அழகிரி நிரூபித்துவந்தாலும், போஸ்டர் அடித்து ஒட்டி, அழைப்பு விடுத்த அவரது தீவிர ஆதரவாளர்கள் சோர்ந்தே போய்விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்!

English summary
MK Azhagiri not ready to break DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X