சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அங்கிட்டு சமாதான முயற்சிகள்... இங்கிட்டு நிர்வாகிகள் நியமன ஏற்பாடுகள்.. அழகிரியின் கண்ணாமூச்சி கேம்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவுடன் ஒரு பக்கம் சமாதான முயற்சிகள் நடைபெற்று வந்தாலும் கட்சி பெயர் பதிவு, நிர்வாகிகள் நியமனம் என இன்னொரு பக்கம் மு.க. அழகிரி தரப்பு படுதீவிரமாக செயல்பட்டும் வருகிறது.

Recommended Video

    3 ஆம் தேதி ஆலோசனை.. அரசியலில் அதிரடி காட்டும் மு.க .அழகிரி..!

    மதுரையில் ஜனவரி 3-ந் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு சட்டசபை தேர்தல் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என சென்னையில் இன்று மு.க. அழகிரி தெரிவித்தார். இருந்தபோதும் அழகிரி, கட்சிக்கு எதிராக எந்த நிலைப்பாடும் எடுத்துவிடக் கூடாது என்பதில் திமுக தலைமை தீவிரம் காட்டுகிறது.

    ஆட்சியை பிடிக்காமல் போக அழகிரி காரணமாக கூடாது.. பதைபதைப்பில் திமுக.. இறுதி சமரசம் தீவிரம் ஆட்சியை பிடிக்காமல் போக அழகிரி காரணமாக கூடாது.. பதைபதைப்பில் திமுக.. இறுதி சமரசம் தீவிரம்

    தயாளு அம்மாளுடன் சந்திப்பு

    தயாளு அம்மாளுடன் சந்திப்பு

    இதனால்தான் அழகிரியை சென்னைக்கு வருமாறும் கருணாநிதி குடும்பத்தினர் அழைத்தனர் என்கின்றன தகவல்கள். சென்னை வந்த அழகிரி, கோபாலபுரம் இல்லம் சென்று தாயார் தயாளு அம்மாளை சந்தித்தும் பேசினார்.

    கட்சி தொடங்கும் பணிகள்?

    கட்சி தொடங்கும் பணிகள்?

    இந்த நிலையில் அழகிரி தமது கட்சியை தொடங்கும் வேலைகளை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மாவட்டங்களில் முக்கிய பொறுப்பாளர்களிடம் ஆதார் அட்டை உள்ளிட்ட சில ஆவணங்களை அழகிரி தரப்பு வாங்கி வருகிறதாம்.

    மாவட்டத்துக்கு 5 நிர்வாகிகள்

    மாவட்டத்துக்கு 5 நிர்வாகிகள்

    கட்சியை பதிவு செய்கிற போது மாவட்டத்துக்கு 5 நிர்வாகிகள் நியமனம் செய்து தேர்தல் ஆணையத்திடம் கொடுப்பதற்காகவே இந்த ஏற்பாடுகள் செய்யபட்டும் வருகின்றனவாம். ரஜினிகாந்த் கட்சியை தொடங்குகிறாரோ இல்லையோ எங்க அண்ணன் கமுக்கமாக எல்லாவற்றையும் செய்து அறிவிப்பார் என்கின்றனர் அழகிரி ஆதரவாளர்கள்.

    பாசமா? கட்சியா?

    பாசமா? கட்சியா?

    இப்போதைய நிலையில் கருணாநிதி குடும்பம் நடத்தப் போகிற சமரச பேச்சுகள் வெல்லப் போகிறதா? அல்லது தேர்தல் களத்தில் தானும் ஒரு சக்தி என புதிய கட்சியோடு வரப் போகிறாரா மு.க. அழகிரி? என்கிற எதிர்பார்ப்புகள்தான் அவரது ஆதரவாளர்களிடம் இருக்கிறது.

    English summary
    Sources said that Former Union Minsiter MK Azhagiri may float new party in Jan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X