புயல் -மழை பேரிடர் காலம்... மக்களுக்கு துணை நிற்க வேண்டும்.. திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புயல் மற்றும் மழை பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு திமுகவினர் உற்ற துணையாக நிற்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாதுகாப்பான இடங்களில் மக்களைத் தங்க வைப்பதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

 Mk stalin advice the DMK Volunteers should help by the people in times of calamity

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'நிவர்' புயலால் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களிலும், உள்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுப்பதுடன், தி.மு.கழக மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கழக நிர்வாகிகளும், துணை அமைப்புகளின் நிர்வாகிகளும் இந்தப் பேரிடர் நேரத்தில் மக்களுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

பாதுகாப்பான இடங்களில் மக்களைத் தங்க வைப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான உணவு - குடிநீர் வழங்குவதற்கும் கழக நிர்வாகிகள் முழுமையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அவசர மருத்துவ உதவிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்திட வேண்டுகிறேன்.

புயல் - மழை பாதிப்புப் பகுதிகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்து, அவர்கள் மேற்கொள்ளும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தேவையான ஒத்துழைப்பு வழங்கிடக் கோருகிறேன்.

பேரிடரிலிருந்து மக்களைக் காக்க ஒன்றிணைவோம் வாரீர், உடன்பிறப்புகளே! 'நிவர்' புயல் நேரத்தில் நிவாரணமாக அமையட்டும் கழகத்தினரின் உதவும் கரங்கள்! வடகிழக்குப் பருவமழை முற்றுப் பெறும்வரை, மக்களைப் பாதுகாப்பது நமது கடமை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+