முதல்வர் பழனிச்சாமிக்கு இருப்பது இதயமா? இரும்பா? - ஸ்டாலின் கேள்வி
சென்னை: புயல் பாதித்த இடங்களுக்கு செல்லாத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருப்பது இதயமா இல்லை இரும்பா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறுகையில் கஜா புயல் பாதிக்கப்பட்ட
இடங்களுக்கு நேரில் செல்லாத முதல்வரை கண்டிக்கிறேன். நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளன. பல லட்சம் தென்னை மரங்கள் அழிந்ததால் பல்லாயிரம் மக்கள் வாழ்வாதாரம் இழந்து விட்டனர்.
4 நாட்களாக பரிதவிக்கும் மக்களை பார்க்க முதல்வருக்கு நேரமுமில்லை. மனமுமில்லை. ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் உள்ளதாக காரணம் காட்டி கொண்டிருக்கிறார். பேரிடர் நேரத்தில் சராசரி மனிதருக்கே இதயம் துடித்துடித்து ஓடிப்போய் உதவுவார்கள்.

இதயம் இல்லையா
முதல்வராக இருப்பவர்களுக்கு மக்கள் நிலையை பார்த்து இதயம் துடித்துடித்திருக்க வேண்டாமா?. ரிப்பன் வெட்டவும் கொடி அசைக்கவும் சென்று கொண்டிருக்கிறார். புயல் பாதிப்பை பார்வையிட செல்லாத முதல்வருக்கு இருப்பது இதயமா, இரும்பா. கஜா புயல் தாண்டவமாடிய நிலையில் எங்கோ சுற்றிக் கொண்டிருக்கிறார் முதல்வர்.
[புயல் பாதித்த இடங்களை நாளை மறுநாள் பார்வையிடுவார் முதல்வர்.. இன்று ஏன் செல்லவில்லை?.. விளக்கம்! ]
|
பாராட்டு
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மையின் #CycloneGaja முன்னேற்பாடு நடவடிக்கைகளை பாராட்டியிருந்தேன்! ஆனால், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்த்தால் மீட்புப் பணிகள் படுமோசமாக இருக்கிறது. குக்கிராமங்களுக்கு இன்னும் அரசு இயந்திரம் செல்லவேயில்லை! இதனை பார்வையிட தமிழக முதலமைச்சருக்கு தயக்கம் ஏன்? என்பது தெரியவில்லை.
|
8 மாவட்டங்கள்
மழை வரும் காலத்திற்கு முன்பே முறையாக கால்வாய்களை, ஏரிகளை, ஆறுகளை தூர் எடுக்கின்ற பணியை அரசு முறையாக நடத்திடவில்லை என்பதை இந்தப் புயல் பாதிப்பு தெளிவாக காட்டுகிறது. பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களைப் பொறுத்தவரையில் இந்தப் புயலின் காரணத்தால் மின்சாரம் அறவே துண்டிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உடனடியாக மின்தடை ஏற்பட்டு இருக்கக்கூடிய பகுதிகளில் அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.

25 லட்சம் நிதி தேவை
புயலால் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் நிதி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அது போதுமானதாக நிச்சயமாக இருந்திட முடியாது, குறைந்தபட்சம் 25 லட்ச ரூபாய் அவர்களுக்கு வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசினுடைய வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தித் தரவேண்டுமென வலியுறுத்துகிறேன்.

வாழை
புயலால் அழிந்த தென்னை ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். மா, புளி, வேம்பு, தேக்கு மரங்களை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வேண்டும்.சாய்ந்த வாழை மரங்களை மீட்க வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications