Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக கூட்டணியில் சிலர் குழப்பத்தை விளைவிக்க நினைக்கலாம்.. சூழ்ச்சிக்கு யாரும் பலியாகிவிட கூடாது.. ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் இருக்கும் சிலா் தேவையில்லாத கருத்துகளைப் பேசி கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கலாம். ஆனால் இந்த சூழ்ச்சிக்கு யாரும் பலியாகிவிடக் கூடாது கூறினார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்களே இருக்கும் நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

MK Stalin Cautions DMK Leaders Against Misleading Remarks by Alliance Partners

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை ஸ்டாலின் வழங்கினார். மேலும் தேர்தல் தொடர்பான பணிகளை விரைந்து செய்யவும் உத்தரவிட்டார். பொங்கல் முடிந்துவிட்டது. இனி ஓய்வின்றி தேர்தல் பணிக்கு தயாராக இருக்க வேண்டும்.. தனிநபா்களைவிட கட்சிதான் பெரிது.

நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்

அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். களத்தில் மக்கள் ஏதாவது குற்றம் குறைகளைச் சொன்னால் கோபப்படக் கூடாது.. அதிருப்தியை காட்டக்கூடாது.. பொறுமையாகப் பதிலளிக்க வேண்டும். அனைத்து பரப்புரைகளையும் மைக்ரோ லெவலில் கண்காணிப்பேன். அமைச்சர், மாவட்ட செயலாளர் , எம்.பி, எம்.எல்.ஏ என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்.

பொங்கல் பண்டிகைக்கு திமுக அரசு வழங்கிய ரூ. 3 ஆயிரம் பரிசுத்தொகை, மக்களின் மகிழ்ச்சியை இரு மடங்காக ஆக்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் செய்த திட்டங்கள் தான் ஆளுநா் உரையில் இடம்பெற்று இருந்தது. இவ்வளவு சாதனைகள் செய்து இருக்கிறோம் என்பதை பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் எதிா்க்கட்சிகளே திண்டாடுகிறார்கள்.


கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க

வீண் அவதூறுகளைப் பரப்பி, மக்களைக் குழப்ப அவர்கள் நினைப்பாா்கள். எனவே அரசின் சாதனைகளை தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும், ஒவ்வொருவருக்கும் கொண்டு சோ்க்க வேண்டும். இனி நமக்கு வெற்றி மட்டுமே.. வெற்றியே நம் இலக்காக நினைத்து பணி செய்ய வேண்டும். நம் அரசின் திட்டங்களால் சுமாா் 2 கோடி பேர் பயனடைகின்றனா். அவா்களை வாக்காளா்களாக உறுதிசெய்ய வேண்டும்.

நம் தோழமைக் கட்சிகளில், நம்மை பிடிக்காத ஒரு சிலா் இருக்கத் தான் செய்வாா்கள். அவா்கள், தேவையில்லாத கருத்துகளைப் பேசி கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கலாம். அத்தகைய சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகிவிடக் கூடாது. கூட்டணி, தொகுதி பங்கீடு ஆகியவற்றை நான் பாா்த்துக் கொள்கிறேன்.

ஓய்வை மறந்திடு, உழைத்திடு

நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்து பணியாற்றுங்கள். உட்கட்சி பிரச்சனைகள் எதுவும் எழக் கூடாது. எந்த தொகுதியில் யாா் நின்றாலும் 234 தொகுதிகளிலும் நான்தான் களம் காண்பதாக நினைத்து களப்பணி ஆற்ற வேண்டும். தேசிய அளவில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக வலிமையாக இருப்பது திமுக மட்டும்தான். உழைப்பு, பொறுமை எல்லாம் முக்கியம்..

ஓய்வை மறந்திடு; முழுமையான வெற்றி கைவசமாகும் வரை உழைத்திடு! அடுத்த 3 மாதங்களும் அமைச்சர் முதல் கிளைக் கழக நிர்வாகி வரை கண்துஞ்சாது களத்தில் சுழல வேண்டும்! இளைஞரணி நிர்வாகிகள் மாநாடுகள், #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் மாநாடுகள், மண்டல அளவிலான 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பயிற்சிக் கூட்டங்கள், திருச்சியில் மாபெரும் மாநில மாநாடு என இனி ஒவ்வொரு நாளும் நமது செயல்பாடுகளும் பரப்புரைகளும் தமிழ்நாட்டை நிறைக்கப் போகின்றன. என்று கூறினார்.

கூட்டத் தீர்மானங்கள் என்னென்ன?

* பிப்-1 முதல் மார்ச்-8 வரை வாக்குச்சாவடி தோறும் 10 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட மகளிர் மேம்பாட்டுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களை வீடு வீடாகச் சென்று விளக்கி, கழகத்திற்கு ஆதரவு திரட்ட வேண்டும்.

* பிப்-1 முதல் பிப்-28 வரை, நட்சத்திரப் பேச்சாளர்களைக் கொண்டு ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் நான்கு இடங்களில் தெருமுனை அல்லது அரங்கக் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல் மூலம் 'தமிழ்நாடு தலைகுனியாது' பரப்புரை.

திருச்சியில் பிரமாண்ட மாநாடு

* BLA, BLC, BDA ஆகியோரைத் தேர்தல் பணிக்குத் தயார் செய்திடும் வகையில் பயிற்சி அளிக்கும் மாநாடுகளை பிப் -11 தாம்பரத்திலும், பிப்-14 திருப்பத்தூரிலும், பிப் -21 மதுரையிலும், பிப்-27 கோவையிலும் நடத்த முடிவு.

* மார்ச்-8 அன்று தீரர்கள் கோட்டமாம் திருச்சியில், 'ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற தலைப்பில் மாபெரும் கழக மாநில மாநாடு. ஆகியன நிறைவேற்றப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+