பெரியார் நினைவு நாளிலேயே தொ.ப.வும் மறைந்துவிட்டார்.. அதிர்ச்சி அளிக்கிறது.. மு.க.ஸ்டாலின் வேதனை
தொ. பரமசிவன் மறைவுக்கு முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்
சென்னை: தமிழக வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான தொ.பரமசிவன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் புகழ்பெற்ற பண்பாட்டு ஆய்வாளரான பேராசிரியர் தொ.பரமசிவன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்... அவருக்கு வயது 70..!
Recommended Video

தமிழகத்தில் பண்பாட்டு ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்வைத்து ஆய்வுலகின் கவனத்தை ஈர்த்தவர்தான் பேராசிரியர் பரமசிவன்... தமிழ் ஆய்வுலகின் முக்கியமான ஆளுமையாகவும் திகழ்ந்தவர்.. ஆய்வாளராகவும் விளங்கியவர்.

உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த தொ.பரமசிவனின் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பு என்று எழுத்தாளர்கள், தலைவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்... மநீம தலைவர் கமல், வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விசிக ரவிக்குமார் எம்பி உள்ளிட்டோர் தங்கள் இரங்கலை பதிவிட்டுள்ளனர்.
அந்த வகையில், திமுக தலைவர் முக ஸ்டாலினும் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் அறிக்கை மூலமாகவும் வெளிப்படுத்தி உள்ளார்.. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழறிஞர் - ஆய்வாளர் - தமிழர்களின் மரபியல் குறித்துப் பல நூல்களைத் தந்த படைப்பாளர் - பெரியாரிய, மார்க்சிய சிந்தனையாளர் திரு. தொ.பரமசிவன் அவர்களின் மறைவுச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழர்களின் பண்பாடு எத்தகைய தனித்துவமானது என்பதையும், குறிப்பாக நாட்டார் வழக்காற்றியல் குறித்தும் பல கட்டுரைகளையும், பேட்டிகளையும் வழங்கியுள்ள தொ.பரமசிவன் அவர்கள், திராவிட இயக்கமும் பெரியாரும் இந்த மண்ணில் ஏற்படுத்தியுள்ள அரசியல் - சமூக - பண்பாட்டுத் தாக்கங்களை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தவர்.
தந்தை பெரியார் நினைவு நாளில் தொ.ப. அவர்களும் மறைவெய்தியுள்ளார். அவரது மறைவுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழார்வலர்கள் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications