கொடைக்கானலில் பிரமாண்ட ஹோட்டலில் குடும்பத்துடன் மு.க.ஸ்டாலின் முகாம்!அடுத்த வியூகம் குறித்து ஆலோசனை!
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் பயணமாக இன்று பிற்பகல் கொடைக்கானல் சென்றடைந்தார். கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ள மு.க. ஸ்டாலின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனையும் மேற்கொள்ள இருக்கிறாராம்.
Recommended Video
கொடைக்கானலில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமான பங்களா உள்ளது. ஓய்வு நாட்களில் மு.க. அழகிரி அங்குதான் இருப்பார் என்பது திமுக வட்டாரங்கள் அறிந்த ஒன்றுதான்.
கடந்த பல ஆண்டுகளாக மு.க.ஸ்டாலின் கொடைக்கானலுக்கு வந்தது இல்லையாம். கடந்த சில நாட்களாக மு.க.ஸ்டாலினை மாலத்தீவுக்கு சென்று ஓய்வு எடுக்குமாறு அவரது குடும்பத்தினர் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் ஸ்டாலின் அதில் தயக்கம் காட்டினார்.

மாலத்தீவுக்கு மறுப்பு
ஏனெனில் மாலத்தீவு சென்று திரும்பினால் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமாம். இந்த 10 நாட்களில்தான் மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் வருகிறது. அதனால்தான் மாலத்தீவு செல்லும் யோசனையை நிராகரித்திருந்தாராம் ஸ்டாலின்.

ஏலகிரி பஞ்சாயத்து
இதையடுத்து ஸ்டாலின் குடும்பத்தினரின் முதல் சாய்ஸாக ஏலகிரிதான் இருந்ததாம். ஏலகிரி துரைமுருகன் பங்களாவில் தங்கலாம் என்பது முதலில் விவாதிக்கப்பட்டதாம். ஆனால் இப்போதுதான் அங்கு கொள்ளை சம்பவம் நடந்ததால் அந்த ஐடியாவையே கைவிட்டுவிட்டனராம்.

கொடைக்கானலில் முகாம்
இதனை தொடர்ந்து திண்டுக்கல் பிரமுகருக்கு போனடித்து விவாதித்திருக்கின்றனர். இதன்பின்னரே கொடைக்கானலுக்கு செல்லலாம் என முடிவெடுத்தனராம். இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கொடைக்கானலுக்கு மு.க. ஸ்டாலின் குடும்பத்தினர் புறப்பட்டனர். பிற்பகலில் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் வருகை தந்தார் ஸ்டாலின்.

கொடைக்கானலில் முகாம்
கொடைக்கானலுக்கு நீண்ட நாட்களுக்கு பின்னர் ஸ்டாலின் வருகை தந்துள்ளது அங்குள்ள திமுகவினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது. கொடைக்கானலில் முகாமிட்டபடியேதான் தேர்தலுக்கு பிந்தைய பணிகள் தொடர்பாக விவாதிக்க இருக்கிறாராம் ஸ்டாலின். இதனால் ஸ்டாலினை நேரடியாக சந்திக்க திமுக தலைகள் கொடைக்கானலுக்கு வருகை தரவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றன உளவுத்துறை தகவல்கள்.

எந்த ஹோட்டல்
கொடைக்கானலில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருக்காக Garlton, Tamara, Kodai International ஆகிய 3 ஹோட்டல்கள் பிளாக் செய்யப்பட்டிருந்தன. இதில் பாம்பார்புரம் செல்லும் வழியில் உள்ள Tamara ஹோட்டல்தான் நவீன சொகுசு வசதிகளுடன் அண்மையில் கட்டப்பட்டது. Garlton ஹோட்டலும் கொடைக்கானலில் பெரிய ஹோட்டல்களில் ஒன்று. இது கொடைக்கானல் ஏரிக்கரையில் உள்ளது. கொடைக்கானலுக்குள் நுழையும் இடத்தில் ஜியோன் பள்ளிக்கு அருகே உள்ளது Kodai International. தற்போது பாம்பார்புரம் Tamara ஹோட்டலில் ஸ்டாலின் குடும்பத்துடன் தங்கி உள்ளார்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications