தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் பெரியார்: மு.க.ஸ்டாலின், கனிமொழி
சென்னை: சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மு.க.ஸ்டாலின் தந்தை பெரியாருக்கு ட்விட்டரில் செலுத்திய புகழஞ்சலி:
சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியாரின் 47வது நினைவு நாள்!
— M.K.Stalin (@mkstalin) December 24, 2020
சமூக அடிமைத்தனம் - ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை - பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார்!#Periyar ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம்! pic.twitter.com/nXysrVmV4W
சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியாரின் 47வது நினைவு நாள்!
சமூக அடிமைத்தனம் - ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை - பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார்! #Periyar ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம்! இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
தந்தை பெரியார் நினைவு தினம் இன்று. பெரியார்- பகுத்தறிவாளர், கடவுள் மறுப்பாளர், சாதி மறுப்பாளர், பெண்ணியவாதி என்று எந்த ஒரு சிறு வட்டத்திற்குள்ளும் அடைக்க முடியாதவர். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், நாடு போன்ற எந்த எல்லைகளுக்கும் அப்பாற்பட்டு மனிதம் போற்றியவர். pic.twitter.com/YDK5lEHMbb
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 24, 2020
திமுக லோக்சபா எம்.பி. கனிமொழியின் ட்விட்டர் பதிவு: தந்தை பெரியார் நினைவு தினம் இன்று. பெரியார்- பகுத்தறிவாளர், கடவுள் மறுப்பாளர், சாதி மறுப்பாளர், பெண்ணியவாதி என்று எந்த ஒரு சிறு வட்டத்திற்குள்ளும் அடைக்க முடியாதவர். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், நாடு போன்ற எந்த எல்லைகளுக்கும் அப்பாற்பட்டு மனிதம் போற்றியவர். இந்த புரட்சிக்காரரின் எல்லா கொள்கை முழக்கங்களுக்கும், போராட்டங்களுக்கும் அடிநாதமாக இருந்தது மனிதாபிமானம் தான். சாதி, மத வேறுபாடுகள் தூண்டப்பட்டு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மலிந்துள்ள இந்த காலகட்டத்தில் முன் எப்போதையும் விட பெரியார் நமக்குத் தேவை.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications