’இண்டியாவிலும்’ இந்தியாவிலும் மாஸ் காட்டும் ஸ்டாலின்! மொத்தமாய் மாறிய கணக்கு..காங்கிரஸுக்கு அடுத்து?
சென்னை: லோக்சபா தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளிவரும் நிலையில் தேசிய அளவில் பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது திமுக. தமிழக முதலமைச்சரும் அக்கட்சியின் தலைவருமான ஸ்டாலின் இந்த வெற்றியின் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்று இருக்கிறார்.
ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்து காத்திருந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவரத் தொடங்கி இருக்கிறது. இந்தியாவை ஆளப்போகும் பிரதமர் யார் என்பதற்கான விடை இன்னும் சில நேரத்தில் கிடைத்துவிடும்.

இந்தியா முழுவதும் பெரு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளை விட குறைவான இடங்களிலேயே முன்னிலை வகிக்கிறது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாஜக தனி பெரும்பான்மை பெறுமா என்பது தற்போதைக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் பாஜக 233 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
அதற்கு அடுத்தபடியாக இந்திய தேசிய காங்கிரஸ் 90க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சமாஜ்வாடி கட்சி 36 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் 32 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 22 தொகுதிகளுக்கும் மேல் வெல்லும் போது இந்தியாவின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாக திமுக இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையில் தான் மற்ற கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன.
பல மாநிலங்களில் பெரும் கட்சிகளாக இருக்கும் காங்கிரஸும் கம்யூனிஸ்டு கட்சிகளும் தமிழகத்தை பொறுத்தவரை திமுக என்ற பெரிய கட்சியின் கீழ் தான் தேர்தலை சந்தித்து இருக்கிறது. அப்படி பார்க்கும் பொழுது திமுகவின் செல்வாக்கு தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. 38 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னணி வகிக்கும் நிலையில் தேசிய அளவில் கவனம் பெற்ற தலைவராக உருவாகி இருக்கிறார் திமுக தலைவரான ஸ்டாலின்.
திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியில் அதிக தொகுதிகளை வென்ற கட்சிகளாக இருந்தாலும் ஒரு மாநில கட்சியாக இருந்து மிகப்பெரிய அளவிலான வெற்றியை கூட்டணிக்கு தேடித் தந்திருக்கிறது திமுக. முழுமையான முடிவுக்கு இன்னும் சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் எப்படி வேண்டுமானாலும் நிலைமை மாறலாம். ஒருவேளை பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காலும் போகலாம்..
அப்படி வரும் போது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வாய்ப்பு இருந்தால் அதில் முக்கிய பங்காற்றும் கட்சியாக திமுக இருக்கும் இதற்கு முக்கிய காரணம் மு.க.ஸ்டாலின் தான். கடந்த தேர்தல்களில் பாஜகவோ காங்கிரஸோ ஆட்சியைப் பிடித்திருந்தாலும் தமிழகத்தில் இருந்து திமுக மிகப்பெரிய அளவிலான பங்களிப்பை கூட்டணியிலும் ஆட்சியிலும் வழங்கி இருக்கிறது. மேலும் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான தலைவராக மு.க ஸ்டாலின் இருக்கிறார்.
கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் ஒரு திமுக எம்.பி கூட இல்லாத நிலையில் கடந்த இரு தேர்தலிகளிலும் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 2014 தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த கட்சியை மிகப் பெரிய வெற்றியை பெற்ற கட்சியாக மாற்றி இருக்கிறார் ஸ்டாலின். தற்போது ராகுல் காந்தி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், திமுக குறித்து பேச்சும் அதில் இடம் பெற்றிருக்கிறது. இதன் காரணமாக தேசிய அளவில் திமுக குறித்து அறிந்து கொள்ள நிறைய பேர் ஆர்வம் காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications