சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"செம ட்விஸ்ட்".. டாப் கியர் போட்டு மேலே வருகிறார் ஸ்டாலின்.. திகைக்கும் பாஜக.. வியக்கும் கூட்டணிகள்

தேசிய அளவில் கவனத்தை பெற போகிறார் மு.க.ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: தேசிய அளவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறார் முக ஸ்டாலின்.. சத்தமே இல்லாமல் திமுக தரப்பு இப்படி ஒரு காரியத்தை அசால்ட்டாக செய்து வருவது அதிமுக கூட்டணி கட்சிகளே கலக்கத்தை தந்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் விரைவில் தேர்தல் வரப்போகிறது.. இத்தனை காலம் அந்த மாநிலத்தில் சத்தமே இல்லாமல் இருந்த பாஜக, திடீரென விஸ்வரூபம் எடுத்து வருகிறது.. இதற்காக முக்கிய புள்ளிகளை தங்கள் பக்கம் இழுக்கும் குறுக்கு வேலைகளிலும் பாஜக இறங்கி உள்ளது.

உண்மையிலேயே பாஜகவின் இந்த வியூகத்தினால் மம்தா சற்று திணறியே போய்விட்டதாக சொல்கிறார்கள்.. அதற்காகத்தான், தங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்களை தங்கள் மாநிலத்துக்கு பிரச்சாரத்துக்கு அழைக்கவும், அதன்மூலம் பாஜகவுக்கு ஒரு செக் வைக்கவும் முயற்சி செய்து வருவதாக சொல்கிறார்கள்.

 தலைமை

தலைமை

அந்த வகையில்தான், சரத்பவார், ஸ்டாலின் தலைமையில் கூட்டிவிட வேண்டும் என்று யோசித்து வருகிறார்.. மம்தாவின் வியூகமானது, மீண்டும் ஆட்சியை தக்க வைப்பது என்றிருந்தாலும், இதை ஸ்டாலின் கனகச்சிதமாக பயன்படுத்தி கொள்ள நிறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சீட்

சீட்

இதற்கு 2 காரணங்களும் சொல்லப்படுகின்றன... ஒன்று தமிழக அளவில் எடுத்து கொண்டால், ஸ்டாலின் முதல்வர் ஆகிவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது பாஜக.. அளவுக்கு அதிகமான சீட் கேட்டு அதிமுகவை நெருக்கி கொண்டிருக்கிறது.. எந்த அளவுக்கு பாஜக சீட் வாங்கி அதிக இடங்களில் போட்டியிடுகிறதோ, அந்தஅளவுக்கு திமுகவுக்கு வெற்றி என்பதே கள நிலவரம்.

 அதிமுக

அதிமுக

மேலும் தேசிய அரசியலை ஸ்டாலின் கையில் எடுப்பதாக காரணம், கடந்த எம்பி தேர்தலிலேயே திமுக என்பது என்ன என்பதை பாஜகவுக்கு தெள்ளத் தெளிவாக தெரியப்படுத்திவிட்ட நிலையில், அதிக அளவு எம்பிக்களை பெற்றுள்ள கட்சிகளில் திமுக பிரதான இடத்தில் உள்ளதும் சாதகமான காரணமாக அமையக்கூடும் என்பதால்தான்!

 தேசிய கட்சி

தேசிய கட்சி

மற்றொன்று, தேசிய கட்சியான காங்கிரஸ் நாளுக்கு நாள் ஸ்திரத்தன்மையை இழந்து கொண்டிருப்பது திமுகவுக்கு பலவீனத்தைதான் தருகிறது.. இத்தனை காலம் கூட்டணியில் இருந்து, காங்கிரஸால் திமுகவுக்கு பெரிய பலன் இல்லை.. இனியும் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே.. அந்த வகையில் தனக்கான இடத்தை தானே தீர்மானிப்பது என்றும், அதை வைத்து பாஜகவுக்கு செக் வைக்கவும் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள்.

 பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்

ஸ்டாலினின் இந்த வியூகம் ஓரளவு வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது.. அதற்கு காரணம் பிரசாந்த் கிஷோர்... இப்போதைக்கு திமுகவுக்கு பிகேதான் வியூகம் வகுக்கிறார், மம்தாவுக்கும் பிகேதான் வியூகம் வகுக்கிறார் என்பதால், நிச்சயம் பெரிய தாக்கத்தை ஸ்டாலின் ஏற்படுத்தக்கூடும்.. ஜெகன்மோகன் ரெட்டிக்கு பாஜக சார்பாக இருந்தாலும், அவருக்கும் பிகேதான் வியூகம் வகுத்து வருகிறார்.. அதனால் அவரையும் மாற்று வழியில் கொண்டு வர பிகேவால் முடியும்.. இப்படி பல வழிகளில் முக ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி தேசிய அரசியல் நகர்ந்து கொண்டுள்ளது!

English summary
MK Stalin is going to gain prominence nationalwide
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X