நீட் தேர்வு.. "டிக் அடித்த" டி.ஆர்.பாலு.. சங்கடத்தில் ஸ்டாலின் அரசு.. சறுக்க காரணம் என்ன?
சென்னை: சிக்ஸர் விளாசிக் கொண்டு இருந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு, நீட் தேர்வு விவகாரம் மலிங்கா வீசும் யார்க்கர் போல தடைக் கல்லாக மாறிவிட்டது என்று கிசுகிசுக்கிறது அறிவாலய வட்டாரம்.
நீட் தேர்வு ரத்து செய்யும் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சறுக்கி விட்டார் என்றுதான், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தரப்பிலும் விவாதிக்கப்படுகிறது.
இத்தனைக்கும் காரணம், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற அறிவிப்பை நிறைவேற்ற சட்டத் தடை எதிர்வந்து நிற்பதுதான்.

நீட் தேர்வு ரத்து வாக்குறுதி
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த மிக முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பதுதான். ஆட்சிக்கு வந்ததுமே, அதற்கான வேலைகளையும் ஜரூராக ஆரம்பித்தது ஸ்டாலின் அரசு. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை அமைத்து நீட் தேர்வு பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டது.

நீதிபதி குழு ஆய்வு
பொதுமக்களும் தங்கள் கருத்துக்களை இ-மெயில் வாயிலாக ராஜன் குழுவிற்கு அனுப்பி வைத்தனர். நடிகர் சூர்யா போன்ற பிரபலங்கள் கூட, நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை நீதிபதி ராஜன் குழுவிற்கு அனுப்பி வைக்க பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆட்டம் காண வைத்த வழக்கு
எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. ஆனால், பாஜக போட்ட ஒரு வழக்கு அத்தனையையும் ஒரு ஆட்டு ஆட்டிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். திமுக அமைத்த ஒரு நபர் குழுவை எதிர்த்து, பாஜக நிர்வாகிகளில் ஒருவரான கரு.நாகராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வு நடத்த வேண்டும் என்பது, உச்சநீதிமன்ற உத்தரவு. எனவே உச்சநீதிமன்ற அனுமதியை பெற்று, ஓய்வு பெற்ற நீதிபதி குழுவை அமைத்தீர்களா என்று ஒரு கேள்வியை முன் வைத்து வழக்கை ஒத்தி வைத்துள்ளது உயர்நீதிமன்றம்.

ஸ்டாலின் தீவிர ஆலோசனை
உயர்நீதிமன்றத்தின் இந்த கேள்விக்கு "இல்லை" என்பதுதான் பதில். எனவேதான் அவசரமாக சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சட்டச் சிக்கலில் இருந்து மீண்டு, எப்படியாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமே என்ற பெரும் தர்ம சங்கடத்தில் முதல்வர் சிக்கியுள்ளார் என்கிறார்கள்.

தேர்தல் அறிக்கை பின்னணி
திமுகவின் மூத்த நிர்வாகிகளிடம் நாம் பேசியபோது, "திமுகவின் தேர்தல் அறிக்கையை டி.ஆர்.பாலு தலைமையிலான குழுதான் தயாரித்தது. அறிக்கை தயாரானதும் ஸ்டாலினிடம் தரப்பட்டது. 'ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம்; அதற்கான சட்டத்திருத்தத்தை சட்டப்பேரவையின் முதல் கூட்டத்திலேயே கொண்டு வருவோம்' என்று தேர்தல் அறிக்கையில் இருப்பதை படித்துப்பார்த்து விட்டு, 'நீட் தேர்வுங்கிறது மத்திய அரசு கொண்டு வந்த சட்டம். அதில் திருத்தத்தை மாநில அரசு எப்படி செய்ய முடியும் ? மேலும், நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கும் இருக்கிறது. சட்டத்தை எப்படி ரத்து செய்ய முடியும் ?' என்றெல்லாம் பாலுவிடம் கேட்டிருக்கிறார் ஸ்டாலின்.

தடுமாற்றம்
அதற்கு, 'சட்டம்தானேங்க...அதெல்லாம் நிறைய ஓட்டைகள் இருக்கும்... பார்த்துக்கலாம்' என்று சாதாரணமாக தெரிவித்திருக்கிறார் பாலு. அவரை நம்பி அந்த வாக்குறுதிக்கு ஒப்புதலும் தந்து விட்டார் ஸ்டாலின். இப்போ, ஸ்டாலின்தான் நீட் விவகாரத்திலிருந்து எப்படி மீள்வது என தடுமாறுகிறார். தற்போது சட்ட வல்லுநர்கள் இது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள். எப்படியும் ஒரு மாற்று வழி கிடைக்கும்ங்கிற நம்பிக்கையில் இருக்கிறார் ஸ்டாலின்" என்று விவரிக்கிறார்கள், திமுக தரப்பில்.

எதிர்க்கட்சிகள் அழுத்தம்
ஸ்டாலின் அரசின் இப்படி ஒரு சங்கடத்தில் சிக்கிக் கொண்டு இருப்பதை புரிந்து கொண்டதால்தான் எதிர்க்கட்சிகளும் இந்த விஷயத்தில் அரசுக்கு மிகுந்த அழுத்தம் தர ஆரம்பித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 2 தினங்களுக்கு முன்பாக வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வு நடத்தப்படுமா இல்லையா என்பதை அரசு உடனே தெரிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த போதும் நீட் தேர்வு விஷயத்தில் திமுக பொய் வாக்குறுதி அளித்து விட்டது என்று சரமாரியாக விளாசினார்.

நம்பிக்கை
ஒருபக்கம் சட்ட நெருக்கடி, இன்னொருபக்கம் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கணைகள் என இரட்டை சங்கடத்தில் சிக்கியுள்ளது ஸ்டாலின் அரசு. இந்த நிலையில்தான், நீட் தேர்வை ரத்து செய்ய, சட்டசபை கூட்டத்தொடரில் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்த கருத்து ஏதோ பொடிவைத்து பேசியது போல இருக்கிறது. எனவே ஏதாவது ஒரு திட்டத்தோடு தமிழக அரசு வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் மாணவர்கள்.
-
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
என்னோட பேவரிட் தோனியை மிஸ் பண்ற பீலிங்கை அவாய்ட் பண்ண முடியல.. ஸ்டாலின் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக்












Click it and Unblock the Notifications