முக்கிய முடிவு எடுக்கப்போகிறேன்! சென்னையிலேயே இருங்க.. திமுக எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் உத்தரவு?
சென்னை: ''சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனாலும் கட்சியின் நலன் கருதி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்போகிறேன். அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். வரும் 10ம் தேதி வரை சென்னையை விட்டு எம்எல்ஏக்கள் வெளியே செல்ல கூடாது. சென்னையிலேயே தங்க வேண்டும்'' என்று திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தவெக மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் திணறும் நிலையில் இந்த உத்தரவின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. சட்டசபை தேர்தல் முடிவு வெளி வந்தாலும் கூட பரபரப்புக்கு மட்டும் பஞ்சமில்லை. மணிக்கு மணி பரபரப்பு தொற்றி கொண்டே செல்கிறது. இதற்கு முக்கிய காரணம் எந்த கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காதது தான்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆனால், ஆட்சியமைக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் இல்லாமல் விஜய் முதல்வராக முடியாமல் தவித்து வருகிறார்.
இந்த பரபரப்புக்கு நடுவே தான் அதிமுக தனது எம்எல்ஏக்களை புதுச்சேரி ரெசார்ட்டில் தங்க வைத்துள்ளது. அங்கு எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இது ஒருபுறம் இருக்க இன்று மாலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து திமுக தலைவர் ஸ்டாலின், புதிய எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில ஸ்டாலின் பேசியபோது, ''சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனாலும் சில முக்கிய முடிவுகளை எடுக்கப்போகிறேன். இந்த முடிவு கட்சியின் நலன் சார்ந்ததாக இருக்கும். என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். இதனால் சென்னையை விட்டு யாரும் வெளியே செல்லக்கூடாது. வரும் 10ம் தேதி வரை சென்னையிலேயே இருக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். இதுதான் தற்போது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் தமிழகத்தில் விஜய் மெஜாரிட்டியை நிரூபிக்காவிட்டால் திமுக - அதிமுக இணைந்து ஆட்சியை பிடிக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த திமுக - அதிமுக கூட்டணியில் மொத்தம் 121 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. மெஜாரிட்டிக்கு 118 எம்எல்ஏக்கள் தான் வேண்டும். ஆனால் அதைவிட திமுக - அதிமுக கூட்டணியில் அதிக எம்எல்ஏக்கள் உள்ளன. இதனால் முக ஸ்டாலினின் இந்த உத்தரவு என்பது திமுக - அதிமுக கூட்டணி ஆட்சியை மையப்படுத்தி போடப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications