தொகுதி மறுவரையறையில் மிகப்பெரிய சதி.. பாயிண்டை பிடித்த ஸ்டாலின்.. பரபரப்பு பதிவு
சென்னை: தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மறுபக்கம் மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தம் கொண்டு வரவுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதற்கு காங்கிரஸ் திமுக உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தீரன் சின்னமலைக்கு நடைபெற்ற துரோகத்துடன் ஒப்பிட்டு இந்த பிரச்சனை குறித்து ஸ்டாலின் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "பிரிட்டிஷாரைக் கலங்கடித்த தமிழ் வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள் இன்று. அன்று, நேரடியாகப் போரிட்டு வெல்ல முடியாத ஆங்கிலேய ஆதிக்கவாதிகள் சூழ்ச்சியால்தான் சின்னமலையை வீழ்த்த முனைந்தார்கள்!

ஆர்எஸ்எஸ் எஜமானர்களின் காலடியில்
இன்றோ, தமிழ்நாட்டுக்குள் நேரடியாக நுழைய முடியாத டெல்லி ஆதிக்கவாதிகள் 'தொகுதி மறுவரையறை' எனும் சதித் திட்டத்தால் நம்மை அரசியல் வலிமையற்றவர்களாக்க முனைகிறார்கள். அன்று, சின்னமலையைக் காட்டிக் கொடுத்தான் ஒரு துரோகி. இன்றும் சில அடிமைகள் தங்கள் சுயநலத்துக்காகத் தாய்த்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே ஆர்எஸ்எஸ் எஜமானர்களின் காலடியில் அடகு வைக்கின்றனர்.
இந்த ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து #TNWillFightTNWillWin எனத் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாளில் சூளுரைக்கிறேன்! #வெல்வோம்_ஒன்றாக!" என்று கூறியுள்ளார். மேலும் #Delimitation #SayNoToNDA #VoteForDMK உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளையும் அந்தப் பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி மறுவரையறைக்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஸ்டாலினின் இந்த கருத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தப் பதிவை திமுகவினர் சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications