7 தமிழர் விடுதலை விவகாரத்தில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது உச்சநீதிமன்றம்: டாக்டர் ராமதாஸ்
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவு எதுவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது மனித நேயமற்ற அதிகார அத்துமீறல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். இதேபோல் 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு சிறைவாசிகளான 7 பேரின் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் வரையறையின்றிக் காலம் தாழ்த்தி வருவது மனித நேயமற்றதும், அதிகார அத்துமீறலானதுமான செயலாகும். 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிப்பவர்களில் ஒருவரான பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.

தேவை விரைவான முடிவு
இதன் பிறகாவது, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்குரிய முடிவினை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும். எடப்பாடி அ.தி.மு.க. அரசும் இனியும் வாய் மூடி வேடிக்கை பார்த்திராமல் உரிய முறையில் வலியுறுத்த வேண்டும்! இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கனிமொழி வலியுறுத்தல்
இதேபோல் திமுக எம்பி கனிமொழியும் தமது ட்விட்டர் பதிவில், பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையில் ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

ராமதாஸ் ட்வீட்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் ஆளுனர் தேவையற்ற காலதாமதம் செய்வதை அனுமதிக்க முடியாது; ஆளுனரிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும்" என்ற உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பு நிறைந்த வார்த்தைகள் 7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் புதிய நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

தவாக வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழரையும் விடுவிக்க வலியுறுத்தி தமிழகத்தின் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள்,இயக்கங்கள் மனித உரிமை ஆர்வலர்கள் ஆகிய எந்த ஜனநாயக குரலுக்கும் செவிசாய்க்காமல், தமிழக அமைச்சரவை தீர்மானத்தையும் கிடப்பில் போட்டுள்ளதோடு, பேரறிவாளன் அவர்களின் கருணை மனு மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காது ஆளுநர் காலம் தாழ்த்துவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல், ஆளுநரின் முடிவுக்கு காத்திராமல் அவர்களின் 30 ஆண்டுகால கொடுஞ் சிறைவாசத்தை முடிவுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications