புது புது ஐடியா இருக்கா.. உடனே இங்க வந்து சொல்லுங்க.. அழைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுக புது ஐடியா - வீடியோ

    சென்னை: தேர்தல் அறிக்கை சம்பந்தமாக யாருக்கெல்லாம் புது புது ஐடியா வருதோ, அவங்க எல்லாரும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    தேர்தல் நெருங்கி வருவதால், அதற்கான ஆயத்த வேலையில் அனைத்து கட்சிகளும் இறங்கிவிட்டன. இப்போது அந்தந்த கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் தயாராகி வருகின்றன.

    ஆனால் இந்த முறை புது யுக்திகளை ஒவ்வொரு கட்சியும் முன்னெடுக்கிறது. சமீபத்தில் அமித்ஷா ஈரோடு வந்து பேசியபோது, மக்களின் ஒவ்வொரு பிரிவினரின் தேவை அறிந்து அதனை தேர்தல் அறிக்கையில் இணைக்க உள்ளோம் என்று ஒரு விஷயத்தை சொன்னார்.

    MK Stalin Request public opinion for Manifesto

    அதேபோல ஒரு பாணியைத்தான் ஸ்டாலின் இப்போது கையில் எடுக்கிறார். பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும்படி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சொல்லி உள்ளார்.

    அதில், "தமிழக முன்னேற்றத்தில் பங்கேற்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு! ''உங்கள் எண்ணங்களும் அரசேற அரிய தருணம். உங்கள் கனவுகளையும், புதுமையான எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்றத் தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொண்டு எங்களோடு கரம் கோர்க்க வாருங்கள்.

    அடிமை அரசால் வளர்ச்சி என்கிற பாதையில் அதள பாதாளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டை முன்னேற்றுவதில், உங்களுடைய கருத்துகளை அறிய ஆவலாக உள்ளேன்.

    உங்களுடைய கருத்துகளை எங்களுக்கு அனுப்ப [email protected] என்ற இமெயிலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து மக்கள் தெரிவிக்கலாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+