கெஞ்சி கேட்டுக்கறேன்.. வெளியே வராதீங்க.. கசப்பு மருந்துதான்.. என்ன செய்யறது.. ஸ்டாலின் வீடியோ
சென்னை: கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசியே சிறந்த ஆயுதம், எனவே கெஞ்சி கேட்கிறேன், தயவு செய்து அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அது போல் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் இன்றைய தினம் முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஒரு வார கால கட்டத்தில் காய்கறி, மளிகைக் கடைகள், பழக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

கட்டுக்குள் வரவில்லை
பால், மருந்து பொருட்கள் மட்டுமே கிடைக்கும். இந்த நிலையில் முழு ஊரடங்கு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. இதனை வீழ்த்த நாம் அனைவரும் கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

2 வாரத்தில் புதிய அரசு
புதிதாக அரசு அமைத்து 2 வாரத்தில் ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ 4 ஆயிரம், பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், ஆவின் பால் குறைப்பு, தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி, கொரோனா நோயாளிகளுக்கு முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை, கொரோனா தடுப்பு பணிகள், 17 ஆயிரம் புதிய படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அமல்
ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்துள்ளோம். புதிதாக டாக்டர்கள், செவிலியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். தளர்வுகளுடன் ஊரடங்கு போட்ட போது வெளியே சுற்றி வந்தனர். யாரும் மதிக்காத காரணத்தினால் தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டியுள்ளது.

நடமாட்டம்
கொரோனாவை யாருக்கும் கொடுக்க மாட்டேன். யாரிடமும் பெற மாட்டோன் என உறுதி ஏற்க வேண்டும். தொற்றால் பாதிப்பு 35 ஆயிரத்திற்கு மேல் எட்டியுள்ளது. இதற்கு மக்களின் நடமாட்டமே காரணம். கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லா ஊரடங்கே ஒரே வழி.

நன்மை
ஊரடங்கு நமது நன்மைக்குத்தான் என உணர்ந்து அனைவரும் வீட்டில் இருங்கள். இது கசப்பு மருந்து தான். ஆனாலும் அருந்தியே ஆக வேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் நிவாரண நிதி வழங்குகிறோம். இந்த ஊரடங்கை மக்கள் அரசு உத்தரவுக்கு கட்டுப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருங்கள் என கெஞ்சி கேட்கிறேன்.

பொதுமக்கள்
எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்கள். கொரோனாவை வெல்ல தடுப்பூசியே சிறந்த ஆயுதம். ஆகையால் அனைவரும் கொரோனா தடுப்பூசியை போடுங்கள். ஊரடங்கை மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும். மாஸ்க் தவறாமல் அணிய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications