நல்ல திட்டங்களை ஆதரித்து எழுதுங்க.. விமர்சனம் இருந்தா சுட்டிக்காட்டுங்க.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு செயல்படுத்தி வரும் நல்ல திட்டங்களை மனப்பூர்வமாக ஆதரித்து எழுதுங்கள். விமர்சனம் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், அதுதான் பத்திரிகை தர்மம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று "கலைஞர் 100 - விகடனும் கலைஞரும்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

MK Stalin requests to Journalists that support good schemes and criticize bad

தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "பத்திரிக்கை அதிபர்கள் எல்லாம் பெருமளவு இங்கே குழுமியிருக்கிறீர்கள். இந்த மேடையில் ஒன்றைச் சொல்கிறேன். ஒரு ஆட்சி செயல்படுத்தி வருகிற நல்ல திட்டங்களை மனப்பூர்வமாக ஆதரித்து எழுதுங்கள். அப்படி எழுதினால்தான், நீங்கள் விமர்சிக்கும்போதும், அதற்கு உண்மையான மதிப்பும் மரியாதையும் இருக்கும். எதையும் ஆதரித்து எழுதாமல் - விமர்சித்து மட்டுமே எழுதினால், அந்த விமர்சனங்களுக்கு மதிப்பே இருக்காது.

சரியானதை ஆதரிப்பதும், விமர்சனம் இருந்தால் அதை சுட்டிக் காட்டுவதும்தான் நடுநிலையான பத்திரிகைக்கு இருக்கக்கூடிய தர்மம்! அதன்படி தமிழ்நாட்டு ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்று மிகுந்த பணிவோடு நான் கேட்டுக்கொள்கிறேன். எனக்காக இல்லை, நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக, இந்த சமுதாயத்திற்காக, இந்த இனத்திற்காக. ஏன் என்றால், இன்று ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகோதரத்துவம், சமூகநீதி ஆகியவை நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. இதை அரசியல்ரீதியாக நாங்கள் எதிர்கொண்டு தடுப்போம். ஆனால், அது மட்டும் போதாது.

MK Stalin requests to Journalists that support good schemes and criticize bad

ஜனநாயகத்தினுடைய நான்காவது தூணாக இருப்பது, போற்றப்படுவது, பத்திரிகைகள்தான். எனவே, தங்களுடைய கடமையை நீங்கள் செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவிலும், பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறிக்கும் பல அம்சங்கள் உள்ளன. ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலை ஒன்றிய அரசு தொடர்ச்சியாகச் செய்து வருகிறது.

மணிப்பூர் மாநிலம் நான்கு மாதங்களாக எரிந்து கொண்டு இருக்கிறது. அதை பற்றி நான் விவரிக்க விரும்பவில்லை. அது எல்லாருக்கும் தெரியும். மணிப்பூரில் உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்றார்கள். சென்று விட்டு அந்த அறிக்கையையும் கொடுத்தார்கள். அப்படி அறிக்கை கொடுத்தவர்கள் மீதே மணிப்பூர் அரசு வழக்கு போட்டிருக்கிறது.

எடிட்டர்ஸ் கில்டு அமைப்புக்கே இந்த நிலைமை என்றால், யோசித்துப் பார்க்கவேண்டும். ஏன் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கடுமையாக இதை கண்டித்திருக்கிறார். உச்சநீதிமன்றமாக இருந்தாலும், தேர்தல் ஆணையமாக இருந்தாலும், அரசியல் சட்ட அமைப்புகள் அனைத்தும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்ற இந்த நேரத்தில், ஜனநாயகம் காக்க - அதன் மூலமாக இந்தியாவை காக்க வேண்டிய கடமை என்பது நான்காவது தூணாக இருக்கின்ற பத்திரிகைகளிடம் தான் இருக்கிறது.

ஜனநாயகம் காக்கப்பட்டால் தான் பத்திரிக்கைத் துறை என்பதே எதிர்காலத்தில் இருக்கும் என்பது என்னுடைய அக்கறையுள்ள வேண்டுகோளாக நான் இங்கே சுட்டிக்காட்டுகிறேன். அதை இந்த மேடையில் வைப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதித்தான் எடுத்துச் சொன்னேனே தவிர வேறு ஒன்றும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+