சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாணவர்களின் கனவு நனவானது... மு.க.ஸ்டாலின் முயற்சியால் 108 மருத்துவ மாணவர்களுக்கு விடிவு காலம்

Google Oneindia Tamil News

சென்னை: படிப்பைத் தொடர முடியாமல் தவித்த மருத்துவ மாணவர்களுக்கு, மு.க.ஸ்டாலின் முயற்சியால் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்த பொன்னையா ராமஜெயம் மருத்துவக்கல்லூரி மூடப்பட்டதால், மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் தவித்த 108 மாணவர்களுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சியால், மருத்துவக்கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

MK Stalins initiative, Students Got Chance in medical colleges

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள திமுகவின் அறிக்கையில், பொன்னையா ராமஜெயம் மருத்துவக்கல்லூரி மூடப்பட்டதால், மருத்துவ படிப்பை தொடர முடியாத மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்களை 10 நாட்களுக்குள் இடம் மாற்றிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படித்தது 10-ம் வகுப்பு.. 40 வருடம் சர்வீஸ்.. விழுப்புரத்தில் போலி மருத்துவர்கள் 2 பேர் கைது படித்தது 10-ம் வகுப்பு.. 40 வருடம் சர்வீஸ்.. விழுப்புரத்தில் போலி மருத்துவர்கள் 2 பேர் கைது

கடந்த டிசம்பர் மாதம் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை பல நாட்கள் ஆகியும், நிறைவேற்றாததால், செய்வதறியாது திகைத்த மாணவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினிடம் முறையிட்டதாகவும், இதையடுத்து அவர் தலைமை செயலாளர், சுகாதார செயலாளர், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர் ஆகியோரை விரைந்து செயலாற்றிட வலியுறுத்தி மனு அளித்ததாகவும், கூறப்பட்டுள்ளது.

அவரது முயற்சியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தற்போது, இடம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், படிப்பைத் தொடர முடியாமல் தவித்த மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

English summary
DMK Leader MK Stalin's initiative, Students Got Chance in medical colleges
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X