3 வருஷமா ஏன் என்னை கூப்பிடவில்லை! அது தான் எனக்கும் புரியல! உதயநிதியை கலாய்த்த முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணிச் செயலாளராக பொறுப்பேற்று 3 வருடங்கள் ஆகியும், இதுவரை தன்னை ஒரு நிகழ்ச்சிக்கும் ஏன் கூப்பிடவில்லை என்றும் அது தான் தனக்கு புரியவில்லை எனவும் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

திமுக இளைஞரணி நிகழ்வில், மகனை கலாய்க்கிற வகையில் முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசியது அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

திமுக இளைஞரணிக்கு தனிச் செயலியை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும், அந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;

ஏன் கூப்பிடவில்லை?

ஏன் கூப்பிடவில்லை?

தம்பி உதயநிதி பேசுகிறபோது "நான் இளைஞர் அணியின் செயலாளராக பொறுப்பேற்று மூன்று வருடம் ஆகிற்று. ஆனால், தலைவரை ஒரு நிகழ்ச்சிக்கும் கூப்பிடவில்லை" என்று சொன்னார். ஏன் கூப்பிடவில்லை? அதுதான் எனக்கும் புரியவில்லை. ஒருவேளை இன்றைக்கு நான் ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய பொறுப்பின் காரணமாக, ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிற காரணத்தால், அந்தப் பொறுப்பிற்கு தலைமையேற்றிருக்கிற காரணத்தால், எனக்கு பல்வேறு பணிகள் இருக்கிறது, அதற்கு நாம் இடையூறு தந்துவிடக்கூடாது என்று ஒருவேளை கருதி, அந்த நல்ல எண்ணத்தோடு அதை அவர் தவிர்த்து இருப்பார் என்று நான் எண்ணிக் கொண்டேன்.

தினமும் கண்காணிக்கிறேன்

தினமும் கண்காணிக்கிறேன்

ஆனால் நான் ஒவ்வொரு நாளும் அவரை watch செய்து கொண்டிருக்கிறேன். டி.வி-யில் பார்க்கிறேன், பத்திரிகைகளில் பார்க்கிறேன், ஊடகங்களில் பார்க்கிறேன். சமூக ஊடகங்களை பார்த்தீர்களென்றால், நல்ல செய்திகளும் வருகிறது, கேலி செய்து, விமர்சனம் செய்து, அதுபோன்ற செய்திகளும் வருகிறது, அதையும் watch செய்து கொண்டிருக்கிறேன். நாங்கள் தலைமைக் கழகத்தின் சார்பில் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று மாத்திரம் சொல்ல மாட்டேன், கண்காணித்துக் கொண்டு இருக்கிறேன்.

யாரும் மறுக்க முடியாது

யாரும் மறுக்க முடியாது

கிராம அளவிலே, ஊராட்சி அளவிலே சுற்றுப்பயணத்தை நடத்தி கட்சிக்கு, தேர்தலுக்கு வெற்றிக்கு வாய்ப்பு தேடித் தந்தார் என்பது ஒரு பக்கம். ஆனால் அதையும் தாண்டி, கட்சி அமைப்பிற்கு, கட்சித் தோழர்களுக்கு அந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு ஒரு எழுச்சியை உருவாக்கித் தந்தார் என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

 செங்கல் -செங்கல்

செங்கல் -செங்கல்

அதைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம், ஒரு செங்கல்தான். அது எந்த அளவிற்கு பிரச்சாரத்திற்கு பயன்பட்டது, எந்த அளவிற்கு தாக்கம் ஏற்பட்டது, மக்கள் மனதிலே எப்படியெல்லாம் அது பதிந்தது என்பதைப் பற்றி நான் அதிகம் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்றைக்கு அவர் எங்கேயாவது கூட்டத்திற்கு போனார் என்றால், அவரைப் பார்த்தால், செங்கல், செங்கல் என்றுதான் சொல்கிறார்கள், அந்தக் காட்சியை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+