சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரெண்டு நாளில் கை மேல் பலன்.. தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?.. முதல்வர் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், தற்போது உள்ள தளர்வுகளற்ற ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Corona Vaccine | சாதித்த தமிழக அரசு.. எப்படி சாத்தியமானது? | Oneindia Tamil

    பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம்.. அரசியல் ஆதாயத்திற்காக, ஜாதி பிரச்சினையாக மாற்றுகிறார்கள்- கமல்ஹாசன் பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம்.. அரசியல் ஆதாயத்திற்காக, ஜாதி பிரச்சினையாக மாற்றுகிறார்கள்- கமல்ஹாசன்

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 24 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை

    சென்னை

    இந்த ஊரடங்கால் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்றைய தினம் தொடங்கி வைத்தார்.

    ஆக்ஸிஜன் தயாரிப்பு தொழிற்சாலை

    ஆக்ஸிஜன் தயாரிப்பு தொழிற்சாலை

    அப்போது அவர் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் அமைந்துள்ள ஐநாக்ஸ் ஆக்ஸிஜன் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஆய்வு செய்த முதல்வர், உற்பத்தி மற்றும் விநியோகம் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து அவர் திருவள்ளூர் மாவட்டம் நேமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராமப்புற மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

    தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

    தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கிற்கு பலனாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைகிறது. அடுத்த இரண்டு அல்லது 3 நாட்களில் முழு ஊரடங்கு பலன் நன்றாக தெரியவரும்.

    முழு ஊரடங்கு

    முழு ஊரடங்கு

    தற்போது அமலில் உள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்றார் அவர். கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசை மட்டும் சார்ந்திருக்காமல் உலகளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார்.

    English summary
    CM MK Stalin says that Lockdown without relaxations will be extended upto discussion.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X