அப்பாவிடம் கூட அடி வாங்கியது இல்லை! அமிர்தத்திடம் அடி வாங்கியிருக்கிறேன்! ஸ்டாலின் சொன்ன ஃபிளாஷ்பேக்
சென்னை: தனது அப்பா கருணாநிதியிடம் கூட தாம் அடிவாங்கியது கிடையாது என்றும் ஆனால் தனது மாமா அமிர்தத்திடம் அடி வாங்கியிருக்கிறேன் எனவும் பேசி முதலமைச்சர் ஸ்டாலின் தனது பழைய நினைவலைகளை பகிர்ந்துகொண்டார்.
முத்தமிழ்ப் பேரவையின் 42ஆம் ஆண்டு விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்று பேசிய அவர் இதனைக் கூறினார். இதனை படிப்பவர்களுக்கு அமிர்தம் என்றால் யார் அவர் கருணாநிதிக்கு என்ன உறவு என்ற கேள்வி எழலாம்.

அமிர்தத்தை பொறுத்தவரை கருணாநிதியின் மூத்த சகோதரி பெரியநாயகி அம்மாள் மகன் ஆவார். ஒரு காலத்தில் தனது தாய்மாமா கருணாநிதிக்கு பக்கபலமாக நின்றவர். கருணாநிதிக்கு மொத்தம் 2 சகோதரிகள், மூத்த சகோதரி மகன் தான் அமிர்தம். இளைய சகோதரி சண்முகசுந்தரத்தம்பாள் மகன்கள் தான் முரசொலி மாறனும், முரசொலி செல்வமும்.
அமிர்தம் ஆரம்பக்காலங்களில் ஒரு சில படங்களை இயக்கியதால் அவரை இயக்குநர் என்ற அடைமொழியோடு அழைக்கும் வழக்கம் உண்டு. கலைஞர் தொலைக்காட்சியை கவனித்துக்கொள்ளும் அமிர்தம், முத்தமிழ்ப் பேரவை என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.
அந்த அமைப்பின் விருது வழங்கும் விழாவில் பேசும் போது தான் ஸ்டாலின் ஃபிளாஷ் பேக்கை பகிர்ந்தார். மேலும், அந்த நிகழ்வில் ஸ்டாலின் பேசியதாவது; ''அமிர்தம் அவர்களிடத்திலே எப்பொழுதும் ஒரு பயம் உண்டு. நான் பல இடங்களிலே இதை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறேன். அப்பாவிடத்திலே கூட அடி வாங்கியது கிடையாது. அவரிடத்திலே அடி வாங்கியிருக்கிறேன். அதை இன்றைக்கும் மறக்க மாட்டேன். அந்த அளவிற்கு என்னை கண்டிப்போடு வளர்த்தவர் இயக்குநர் அமிர்தம்.''
'' தொடர்ந்து அவர் ஆற்றிவரும் முத்தமிழ்த் தொண்டிலே என்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற உணர்வோடு நானும் தவறாமல் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்வதுண்டு.''
-
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications