தேர்தல் நேரத்துல கிரண்பேடிய நீக்கி நாடகமா ஆடுறீங்க.. மக்கள் மன்னிக்க மாட்டாங்க... ஸ்டாலின் ஆவேசம்!
சென்னை: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றப்பட்டிருப்பது மிகுந்த காலதாமதமான அறிவிப்பு என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அரசியல் சட்டத்தையும் - ஜனநாயகத்தையும் சீர்குலைத்து, கேலிப் பொருள்களாக்கிய, அதிகார மோகம் கொண்ட ஒரு துணை நிலை ஆளுநரை இவ்வளவு நாள் பதவியில் வைத்திருந்ததே மிகப்பெரிய தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருக்கின்ற நேரத்தில் மாற்றியிருப்பது கண்துடைப்பு கபட நாடகம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிரண்பேடி அதிரடி நீக்கம்
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும், மாநில முதல்வர் நாராயணசாமியும் பாம்பும், கீரியுமாக செயல்பட்டு வந்தனர். மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் கொஞ்சம் கூட ஒத்து போகவில்லை. நேற்று இரவு திடீர் என புதுச்சேரி ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கப்பட்டார்.இந்த நிலையில் ஆளுநர் கிரண்பேடி மாற்றப்பட்டிருப்பது மிகுந்த காலதாமதமான அறிவிப்பு என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

காலதாமதமான அறிவிப்பு
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றப்பட்டிருப்பது மிகுந்த காலதாமதமான அறிவிப்பு. அரசியல் சட்டத்தையும் - ஜனநாயகத்தையும் சீர்குலைத்து, கேலிப் பொருள்களாக்கிய, அதிகார மோகம் கொண்ட ஒரு துணை நிலை ஆளுநரை இவ்வளவு நாள் பதவியில் வைத்திருந்ததே மிகப்பெரிய தவறு.

கண்துடைப்பு நாடகம்
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் செயல்பட விடாமல் தடுத்து - ஒவ்வொரு நாளும் நெருக்கடியை உருவாக்கி - அம்மாநில மக்களுக்கான நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த விடாமல் முடக்கி வைத்தவர் துணை நிலை ஆளுநர். மக்களின் விருப்பத்திற்கு மாறாக, போட்டி முதலமைச்சராகச் செயல்பட அனுமதித்து, புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக முடக்கி முறித்துப் போட்ட பா.ஜ.க. அரசு, தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருக்கின்ற நேரத்தில் மாற்றியிருப்பது கண்துடைப்பு கபட நாடகம்.

புதுச்சேரி மக்கள் மன்னிக்க மாட்டார்கள்
புதுச்சேரி மக்களை ஏமாற்றக் கடைசி நேர நடவடிக்கை - இறுதிக் கட்ட முயற்சி. துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை வைத்து பா.ஜ.க. செய்த தரம் தாழ்ந்த அரசியலையும் - அம்மாநிலத்தின் முன்னேற்றத்தைப் பாழ்படுத்திய மிக மோசமான செயலையும் புதுச்சேரி மக்கள் ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications