சறுக்கியது எங்கே? யார் மீது தவறு? ரிப்போர்ட் வேணும்.. தோல்வி பற்றி விளக்கம் கேட்கும் ஸ்டாலின்!
2 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தது எப்படி என்று திமுக தலைவர் ஸ்டாலின் நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: 2 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தது எப்படி என்று திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் திமுக கட்சி தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகளும் நேற்றுதான் வெளியானது. இதில் இரண்டு தொகுதியிலும் அதிமுக கட்சியே வெற்றிபெற்றது.
நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றிபெற்றார். விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றிபெற்றார்.

இரண்டும் தோல்வி
இந்த தோல்வியை திமுக தலைவர் ஸ்டாலின் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்றுதான் கூறவேண்டும். கண்டிப்பாக இரண்டு தொகுதியிலும் வெற்றிபெற்று விடுவோம் என்று அவர் நினைத்து இருந்த நேரத்தில், திமுக அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. அதிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் திமுக தோல்வி அடைந்துள்ளது.

என்ன விளக்கம்
இரண்டு தொகுதி இடைத்தேர்தலுக்காக ஸ்டாலின் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். சாலை பிரச்சார கூட்டங்கள், வாகன பிரச்சாரம் இரண்டும் மேற்கொண்டார். ஆனாலும் திமுக தோல்வியை தழுவி உள்ளது. இதனால் திமுக எங்கு சறுக்கியது என்று ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு இருக்கிறாராம்.

நிறைய கேள்விகள்
வேட்பாளர் தேர்வில் தவறு நேர்ந்துவிட்டதா? வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதில் ஏதாவது குளறுபடி நேர்ந்ததா? உறுப்பினர்கள் இடையே பூசல் இருக்கிறதா என்று பல விளக்கங்களை திமுக தலைவர் ஸ்டாலின் கேட்ட இருக்கிறார். டி. ஆர் பாலுவும் இந்த சந்திப்பில் உடன் இருந்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்
இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதற்குள் தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து அதை களைய வேண்டும். அப்போதுதான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். இதனால் திமுகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications