ஒரே பந்தில் 3 விக்கெட்.. ‘யார்க்கர்’.. எதிரணியை துவம்சம் செய்த ஸ்டாலின்.. திமுகவுக்கு ஏறுது மைலேஜ்!
சென்னை : ஒரே நாளில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த 3 பேரின் முகத்திரைகளையும் கிழித்தெறிந்து தனக்கு மைலேஜ் ஏற்றிக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலடியாகவும், திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாகவும், அரசியல் எதிரிகளுக்கு எதிரான பலமான காய்நகர்த்தலாகவும் என ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
2 விசாரணை ஆணைய அறிக்கைகளின் மூலம் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா என மூவருக்கும் செக் வைத்து, அவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது திமுக அரசு.

2 பகீர் அறிக்கைகள்
தமிழக சட்டசபையில் நேற்று ஜெயலலிதா மரண மர்மம் பற்றிய ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றிய அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் ஜெயலலிதா மரணம் பற்றிய பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சைகள் அளிக்கவும், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவும் சசிகலா தடையாக இருந்ததாக அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு செக்
மேலும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த முடிவுகளை சசிகலா குடும்பத்தினரே எடுத்தனர் என்றும், அப்பல்லோ மருத்துவமனை முழுவதும், சுகாதாரத்துறையும் சசிகலா கன்ட்ரோலில் இருந்தது என்றும், ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் 10 அறைகளை சசிகலா தரப்பினர் ஆக்கிரமித்திருந்ததாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவை முக்கிய குற்றவாளியாக முன்னிறுத்தி இருக்கிறது ஆணையம். இந்த அறிக்கை மூலம், சசிகலாவின் அரசியல் பயணத்துக்கு கடுமையான செக் வைக்கப்பட்டுள்ளது.

செக் 2 - ஓபிஎஸ்
மேலும், விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த ஓ.பன்னீர்செல்வம், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதையும் போட்டு உடைத்துள்ளது அறிக்கை. எதைக் கேட்டாலும், தெரியாது என்ற பதிலையே ஓபிஎஸ் சொன்னதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிறிதும் காலம் தாழ்த்தாமல் முதல்வர் பதவிக்கு தன்னை பொருத்திக் கொள்ளத் தயார் நிலையில் இருந்தது, தற்செயலான நிகழ்வாகத் தோன்றவில்லை, அதிகார மையத்தின் மர்மமான சூழ்ச்சிகளால் கிடைத்த பதவி அவருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை என்ற ஏமாற்றத்தினால் கோபமடைந்த ஓ.பன்னீர்செல்வம் அரசியல் லாபத்திற்காக தர்மயுத்தம் தொடங்கினார் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செக் 3 - ஈபிஎஸ்
இதேபோல, மறைமுகமாக எடப்பாடி பழனிசாமியும் இந்த வளையத்திற்குள் வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் பெயர் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் இடம்பெறவில்லை என்றாலும், அவரது ஆதரவாளராக இருக்கும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் முக்கிய குற்றவாளியாக கருதுகிறது ஆறுமுகசாமி ஆணையம். அவர் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணை நடைபெறும் பட்சத்தில், திரைமறைவில் நடந்த பல சம்பவங்களும் வெளிச்சத்திற்கு வரக்கூடும். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆக்கப்பட்டதற்கான பின்னணிகளும் வெளிப்படும் என்கிறார்கள்.

எடப்பாடிக்கு எதிரான அஸ்திரம்
இது ஒருபுறம் என்றால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை முழுக்க முழுக்க, காவல்துறை அதிகாரிகளையும், மாவட்ட ஆட்சியர், தலைமை செயலர் போன்ற அதிகாரிகளைக் குற்றம்சாட்டுகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை அருணா ஜெகதீசன் ஆணையம் வழங்கியுள்ளது. இதன்மூலம், காவல்துறைக்கு பொறுப்பான அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வளையத்தில் சிக்கியுள்ளார்.

ஈபிஎஸ் சொன்னது பொய்
மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டிவியில் பார்த்த பிறகுதான் எனக்கே தெரியும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி கூறியது அனைத்தும் பொய் என்றும் தூத்துக்குடி நிலவரங்கள் குறித்து அனைத்து விபரங்களையும் எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றும் அருணா ஜெகதீசன் ஆணையம் போட்டு உடைத்துள்ளது.

திமுகவின் 2 ஆயுதங்கள்
திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அதிமுகவினரை மடக்குவதற்கான ஆயுதமாக இந்த விசாரணை ஆணைய அறிக்கைகள் இருக்கக்கூடும். அவர்கள் திமுக அரசை விமர்சித்தால், ஜெயலலிதா மரணம் பற்றியும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றியும் விசாரணை ஆணையங்கள் முன்வைக்கும் கருத்துகளை அவர்களை நோக்கி கேள்வியாக எழுப்ப முடியும். இதனால், அதிமுகவினரின் விமர்சனங்கள் மக்களிடையே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளே பிரதானமாக நிற்கும்.

மைலேஜ்
திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து முன்வைக்கும் விமர்சனம். இப்போது மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாகச் சொன்ன இந்த விசாரணைகளை முடித்து மக்களிடம் தெளிவுபடுத்தி இருப்பதால், நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என அவர்களுக்கு எளிதாக பதிலடி கொடுக்கலாம். இந்த ஆணைய அறிக்கைகளுக்குப் பின்னர், அதிமுகவை கார்னர் செய்யும் திமுகவுக்கு இப்படியான மைலேஜ் கொடுக்கும் அம்சங்களும் இருக்கின்றன.

3 விக்கெட் - சேம் சைடு
2 ஆணைய அறிக்கைகள் மூலம் பிரதான எதிர்கட்சியான அதிமுகவில் இருந்து 3 பெரும் தலைகளும் சிக்கியுள்ளனர். அதிலும் எடப்பாடி பழனிசாமிதான் இந்த 2 விசாரணை ஆணையங்களையும் அமைத்தவர். இரண்டிலுமே எடப்பாடி பழனிசாமி சிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதிமுக அரசில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் மூலமே அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்க விஷயம். அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்வலைகளைக் கிளப்பி இருக்கும் இந்த விவகாரம் வரும் நாட்களில் பல விவாதங்களைப் பற்றவைக்கக்கூடும் என்கிறார்கள்.
-
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு -
எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications