ஆசிரியர்கள் போராட்ட களத்தில்.. மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு
மு.க.ஸ்டாலின் - டிடிவி தினகரன் இன்று திடீரென சந்தித்து கொண்டார்கள்.
சென்னை: ஆசிரியர்கள் போராட்ட களத்தில் மு.க.ஸ்டாலினும், டிடிவி தினகரனும் சந்தித்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
7-வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1,800 இடைநிலை ஆசிரியர்கள் டி.பி.ஐ. முன்பு நேற்று குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினர்.
ஆனால் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் ஒன்றும் உடன்பாடு ஏற்படவில்லை. அவர்களை போலீசார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்தனர். நேற்று இரவு முதல் அங்கு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்திலும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மேலும் பரபரப்பு
ஒரு பக்கம் கொத்து கொத்தாக மயங்கி விழுகிறார், மறுபக்கம் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது, இன்னொரு பக்கம் கைது செய்யப்பட்டும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால் டிபிஐ வளாகமே பரபரப்பாக காணப்பட்டு வரும் நிலையில், மேலும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர் திமுக தலைவர் ஸ்டாலினும், அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரனும்!

நலம் விசாரிப்பு
போராடி வரும் ஆசிரியர்களை சந்திக்க ஸ்டாலின் அங்கு சென்றிருந்தார். அந்த நேரம் பார்த்து டிடிவி தினகரனும் போராட்டக்காரர்களை சந்திக்க வந்துவிட்டார். அப்போது ஒருவருக்கொருவர் நேரில் பார்த்துக் கொள்ளும் சூழல் அங்கு எதிர்பாராமல் ஏற்பட்டுவிட்டது. அப்போது ஸ்டாலினும், தினகரனும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். இதனை எத்தனை பரபரப்பில் இருந்தாலும் வளாகத்தில் இருந்த அனைவருமே கவனிக்க தவறவில்லை.

சிறுபிள்ளைதனம்
இவர்கள் இருவருக்குள்ளும் ரகசிய கூட்டணி இருக்கிறது என்று ஒரு வருடமாக அதிமுக சொல்லி சொல்லி ஓய்ந்துவிட்டது. காங்கிரசுக்கு ஸ்டாலின் மறைமுகமாக உதவி செய்கிறார், ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட்டு, சிறுபிள்ளைதனத்தை வெளிப்படுத்திவிட்டார் என்று தினகரன் பகிரங்கமாக சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார். இதன்மூலம் திமுகவுடன் கூட்டணி இல்லை என்பது வெட்ட வெளிச்சமானது.

ரணகளம்
ஏற்கனவே ஓரிருமுறை ஸ்டாலினும், தினகரனும் சந்தித்து கொண்டார்கள், பேசிக் கொண்டார்கள் என்று பேசப்பட்டாலும், பகிரங்க எதிர்ப்பு கருத்துக்கு பிறகு இப்போது நேருக்கு நேர் சந்தித்து கொண்டது முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. அதனால்தான் ரணகளமாக இருந்த டிபிஐ வளாகம், எதிர்பாராத இருவரின் சந்திப்பால் மேலும் சூடு பிடித்து அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் டிபிஐ வளாகத்தில் கொஞ்ச நேரத்துக்கு சலசலப்பும் ஏற்பட்டது.

-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!

Click it and Unblock the Notifications