ஸ்டாலினை “சிலிர்க்க” வைத்த விஜய் டிவி நிகழ்ச்சி.. இடஒதுக்கீடு பற்றி தீயாய் பேசிய திருவாரூர் நர்மதா
சென்னை: விஜய் டிவியில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை பேசிய தமிழ் பேச்சு எங்கள் மூச்சு போட்டியாளர் நர்மதாவை போற்றி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
விஜய் டிவியில் ஒளிபரபப்பாகி வரும் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் திருவாரூரை சேர்ந்த நர்மதா, இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். அவர் தனது உரையில், "இடஒதுக்கீடு எனது உரிமை. ஆம். 2000 ஆண்டுகாலமாக எந்த சாதியின் அடிப்படையில் எனது கல்வி, வேலை வாய்ப்பு, உரிமை மறுக்கப்பட்டதோ அதே சாதியை அடிப்படையாக கொண்டு எனக்கு கொடுக்கப்படும் இடஒதுக்கீடு எனது உரிமை.

எங்கு, யாருக்கு, எதன் காரணத்தால் உரிமை மறுக்கப்பட்டதோ அங்கே, அவருக்கு, அதே காரணத்தை அடிப்படையாக கொண்டுதான் உரிமையை மீட்டுக்கொடுக்க முடியும். அதனால்தான் இந்தியாவிலே சாதி ரீதியாக இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது. ஆனாலும்கூட இந்த இடஒதுக்கீட்டை பார்த்தால் முன்னேறிய வகுப்பை சார்ந்தவர்களுக்கு சற்று அநீதியாகதான் தோன்றுகிறது.
ஒரு முன்னேறிய வகுப்பை சார்ந்த ஒரு மாணவன் தன்னுடைய முகநூலிலே பதிவிடுகிறான். 84 மதிப்பெண் எடுத்த எனக்கு கிடைக்காத வேலை வாய்ப்பு, 83 மதிப்பெண் எடுத்த பட்டியலினத்தவன் என்ற ஒற்றை காரணத்துக்காக அவனுக்கு கிடைக்குமென்று சொன்னால், எங்கே எனது தகுதி மறுக்கப்படுகிறது. அநீதி இழைக்கப்படுகிறது என்று சொல்கிறான்.
இதனை சற்று விவாதத்திற்கு உள்ளாக்குவோம். அந்த 84 மதிப்பெண்ணுக்கும் 83 மதிப்பெண்ணுக்கும் என்ன வித்தியாசம் என்று சற்று கேட்டால், நீங்கள் சொல்லுகிற பதில் இடையில் ஒரு மதிப்பெண் இருக்கிறது என்று. ஆனால், என்னை பொறுத்தவரையில் அந்த இருவேறு மதிப்பெண்ணுக்கு இடையிலும் ஒரு நூற்றாண்டுகால இடைவெளி இருக்கிறது.

ஆம், அந்த முன்னேறிய வகுப்பை சார்ந்தவனுடைய தாத்தா, கடைக்காரனாக இருந்த அதே நேரத்தில், அவர்கள் இடத்தில் களை பறித்துக்கொண்டு இருந்தவனுடைய பேரன் தானே இவன். அவனுடைய தந்தை மருத்துவனாக இருந்தபோது அவர்கள் வீட்டில் மலம் அள்ளிக்கொண்டு இருந்தவன் தானே இந்த ஒடுக்கப்பட்டவன்.
இப்படி கல்வியும் வேலை வாய்ப்பும் ஒரே குடும்பத்தில் அடக்கி வைக்கப்பட்டு முன்னேறிய வகுப்பில் இருந்து வந்த ஒருவன் எடுத்த ஒரு மதிப்பெண்ணுக்கும், முன்னேற்றத்தின் வாசனைக்கூட படாத வகுப்பில் இருந்து வந்தவன் எடுத்த மதிப்பெண்ணுக்கும் இடையில் குறைந்த அந்த ஒற்றை மதிப்பெண்ணானது எந்த தாழ்த்தப்பட்டவனுடைய மதிப்பெண்ணை குறைத்துக் காட்டவில்லை.,
அவனை தாழ்த்தியே வைத்திருந்த இந்த சமூகத்தின் மதிப்பெண்ணை அல்லவா குறைத்துக்காட்டி உள்ளது. சாக்கடை அள்ளுபவன் ஸ்டெதஸ்கோப்பை பிடிக்கக்கூடாதா என்று ஆட்சியாளர்கள் மாறி மாறி கேட்ட கேள்விகள்தான் இன்று இடஒதுக்கீட்டை சட்டமாக்கி இருக்கிறது. அந்த சட்டம்தான் பல பிற்படுத்தப்பட்டவனை பட்டதாரியாக்கி இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட ஒருவனுக்கு அரசு வேலையை அங்கீகரித்து இருக்கிறது.

தாழ்த்தப்பட்டவனுடைய குடும்பத்தில் இருந்து குறைந்தபட்சம் 5 தலைமுறையாவது படித்த தலைமுறையாக மாறும் வரை இங்கே இடஒதுக்கீடு இருக்கும். அந்த இடஒதுக்கீட்டை தாழ்த்தப்படனின் சலுகையாக பார்க்காதீர்கள். உரிமையற்றவனுக்கு கொடுக்கும் உரிமையாக பாருங்கள். வாய்ப்பு மறுக்கப்பட்டவனுக்கு கொடுக்கும் நீதியாக பாருங்கள். என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி." என்றார்.
இதனிடையே இந்த பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரெண்டான நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இதனை ட்விட்டரில் பகிர்ந்து பாராட்டி உள்ளார். அதில், "சொற்களுக்கு உயிர் இருக்கிறது. இனமான - பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை. அதனால்தான் தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை விஜய் டிவி தொடங்கும்போது, "பேச்சுக்கலை என்பது பழைய மூடநம்பிக்கைகளைப் பாடி, பிற்போக்குத்தனத்தைப் போற்றுவதற்குப் பயன்படக் கூடாது.

நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவரை மட்டம் தட்டுவதாக இருக்கக் கூடாது. பகுத்தறிவையும், அறவுணர்வையும் வளர்த்து, முற்போக்கான சமூகத்துக்கு வழிவகுப்பதுதான் சிறந்த பேச்சுக்கு இலக்கணம்! பயனற்றவற்றைத் தவிர்த்து, பகுத்தறிவை வளர்க்கும் நோக்கத்தை இந்த நிகழ்ச்சி பின்பற்றும் என்று நான் மனதார நம்புகிறேன்" என வாழ்த்தினேன்.
எனது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் "இடஒதுக்கீடு எனது உரிமை" என்ற தலைப்பில் உரையாற்றிய திருமிகு தே.நர்மதா அவர்களின் உரை அமைந்திருந்தது. கருத்து செறிந்த அவரது உரை வீச்சில் நூற்றாண்டுகால இடைவெளியைச் சுட்டிக்காட்டிய அவரது சொற்களுக்கு உயிர் இருக்கிறது. என் திருவாரூர் மண் ஈன்றெடுத்த அவரை வாழ்த்துகிறேன்! அனைவரும் சொல்வோம் #ReservationIsOurRight!" என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை, சிக்கும் விஜயா! மீனாவுக்கு இனி தான் கம்பேக்.. செம சம்பவம் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications