"சுரேஷ்.. நல்லா இருக்கீங்களா?.. நல்லா டாப் கியரில் ஸ்டாலின்.. சசிகலா ஆடியோ வைத்து "அரசியல் ஸ்டண்ட்"

சசிகலாவின் ஆடியோவை கசிய விட்டவர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு பக்கம் ராக்கெட் வேகத்தில் திமுகவின் செல்வாக்கு உயர்ந்து கொண்டே வருகிறது.. மற்றொரு பக்கம் சசிகலாவின் அரசியல் வருகை குறித்த திடீர் ஆடியோக்கள் கசிந்து வருகின்றன.. இதற்கு என்ன காரணம்? திமுகவின் செல்வாக்கை, ஜீரணிக்க முடியாமல், திசை திருப்பவே சசிகலாவை வைத்து குட்டையை குழப்பி வருகிறார்களோ? அது யார்? என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்து வருகிறது.

Recommended Video

    Sasikala பேசியதாக இன்னொரு Audio | AIADMK-வில் நெருக்கடி | Oneindia Tamil

    சசிகலாவை பொறுத்தவரை, ரிலீஸ் ஆகி வந்ததுமே, அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. அது இல்லாமல் போய்விட்டது..

    2 வயது குழந்தைக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும்.. உடனே நிதி உதவி செய்யுங்கள்!

    தேர்தல் களத்திலாவது ஏதாவது மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றார்கள்... அதுவும் இல்லாமல் போய்விட்டது.

    தினகரன்

    தினகரன்

    அதிமுக தற்போது மண்ணை கவ்வியுள்ள ஓபிஎஸ், சசிகலாவின் தயவுடன் எப்படியும் ரீ-என்ட்ரி தருவார் என்றம், அதைவைத்து கட்சியை கைப்பற்ற நடவடிக்கைகள் ஜரூராக நடைபெறும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.. இதற்காகவே 2 ஆப்ஷன்கள் பெருத்த எதிர்பார்ப்பில் உள்ளன.. ஒன்று, தினகரன் வீட்டு கல்யாணம், மற்றொன்று, சசிகலாவன் போயஸ்வீட்டு கிரகப்பிரவேசம்.

     ஆடியோ

    ஆடியோ

    இப்படிப்பட்ட சூழலில்தான், சசிகலா பேசிய ஆடியோ கசிந்துள்ளது.. "சுரேஷ் நல்லா இருக்கீங்களா? கொரோனா காலம், ஜாக்கிரதையாக இருங்க... அவங்க சண்டை போட்டுக்கிறது கஷ்டமா இருக்கு.. நாங்க கஷ்டப்பட்டு, அந்த கட்சியை வளர்த்தோம்.. இப்போ கட்சி வீணாவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது... சீக்கிரம் வந்துடுவேன்.. அம்மா எப்படி கட்சியை வைத்திருந்தாங்களோ, அந்த அளவுக்கு கட்சியை கொண்டு போய் விடுவேன்" என்று பேசியிருக்கிறார்.

     ஆஸ்பத்திரி

    ஆஸ்பத்திரி

    இதுதான் நேற்று முதல் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.. யார் இந்த சுரேஷ்? ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகும்போதே, உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.. ஆஸ்பத்திரியில் இருந்தபோதே சசிகலாவிடம் செல்போன் தரப்பட்டுவிட்டது.. அப்போதே, கட்சி நிலவரம் குறித்து ஒருசில முக்கிய நிர்வாகிகளிடம் பேச ஆரம்பித்துவிட்டார். ரிலீஸ் ஆகி வந்து இத்தனை மாதமாகியும் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளிடம் போனில் பேசிக் கொண்டுதானிருக்கிறார். அப்படி இருக்கும்போது, சுரேஷிடம் பேசிய போன் மட்டும் எப்படி லீக்கானது? என்பதே அந்த சந்தேகம்.

    அதிமுக

    அதிமுக

    இதை வெளியிட்டது சசிகலா தரப்பு என்கிறது ஒரு குரூப்.. இது சுரேஷ் என்பவரிடம் மட்டும் பேசிய பேச்சு இல்லை, ஒட்டுமொத்த அதிமுகவினருக்கும் சசிகலா தெரிவிக்கும் மெசேஜ் இது தான் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.. ஆனால், இது திமுகவுக்கு வைத்த குறி என்கிறது வேறு ஒரு தரப்பு..!

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    காரணம், முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்தே திமுக அரசின் செயல்பாடுகள் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வருகிறது.. அதைவிட, ஸ்டாலினின் அறிவிப்புகளும், அணுகுமுறைகளையும் மாற்று கட்சியினரையும் வியக்க வைக்கும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது.. தற்போதைய தமிழக மக்களின் மொத்த கவனத்தையும் ஸ்டாலின் தன் அசத்தல் செயல்பாடுகளால், தன்பக்கம் திசை திருப்பி வருகிறார்.

     யார் அது?

    யார் அது?

    நாளுக்கு நாள் உயர்ந்து வரும் திமுகவின் செல்வாக்கை பொறுத்து கொள்ள முடியாமல், வேண்டுமென்றே சசிகலாவை வைத்து திசை திருப்பப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.. ஆனால், இந்த காரியத்தை செய்வது யாராக இருக்கும்? திமுகவின் செல்வாக்கை பொறுத்து கொள்ள முடியாதவர்கள் அதிமுகதான்.. ஆனால், சசிகலாவை சீனில் கொண்டு வர வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இருக்காது.. அப்படியானால் அந்த வலிமை பொருந்திய கட்சி எது? அதிகாரம் மிக்க நபர் யார்? என்பதே அந்த கேள்வி.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+